நடராஜனுக்காக பும்ராவை ஓரங்கட்டிய பிசிசிஐ.. பின்னணியில் முக்கிய காரணம்.. கோலி & சாஸ்திரி பிளான்!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் பும்ரா சேர்க்கப்படாதது ஏன் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்திய அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவி உள்ளனர். இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது.

நீக்கம்
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் பும்ரா சேர்க்கப்படவில்லை. இதற்கு பதிலாக நடராஜன், புவனேஷ்வர் குமார், ஷரத்துல் தாக்கூர், சாகர், சைனி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டள்ளனர். காயம் காரணமாக ஷமி அணியில் இல்லை.

என்ன காரணம்
இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் பும்ரா சேர்க்கப்படாதது ஏன் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நடராஜன் மீது நம்பிக்கை வைத்துதான் பும்ராவை கோலி நீக்கி உள்ளார் என்கிறார்கள். நடராஜன், பும்ரா இரண்டு பேரும் ஒரே மாதிரி பவுலிங் செய்வார்கள்.

பவுலிங்
இதன் காரணமாகவே நடராஜனை அணியில் எடுத்துவிட்டு பும்ராவை கோலி ஒதுக்கி உள்ளார் என்கிறார்கள். பும்ராவிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக கோலி அவரை அணியில் எடுக்கவில்லை. இந்த டி 20 தொடருக்கு பின் பும்ரா ஒருநாள் மற்றும் உலகக் கோப்பை டெஸ்ட் போட்டிகளில் ஆட வாய்ப்பு உள்ளது.

உலகக் கோப்பை டெஸ்ட்
உலகக் கோப்பை டெஸ்ட் போட்டிகளில் இவர் ஆட வேண்டும் என்பதற்காக கோலி பும்ராவிற்கு ஓய்வு கொடுத்துள்ளார். பெரும்பாலும் உலகக் கோப்பை டி 20 போட்டியில் பும்ரா, நடராஜன் இரண்டு பேரும் ஒரே அணியில் ஆடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் பும்ராவிற்கு முடிந்த அளவு ஓய்வு கொடுக்கும் திட்டத்தில் கோலி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications