Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன மாதிரியான பவுலிங்.. மிரண்டு போன ஹிட்மேன்.. நடராஜனை கொண்டாடும் ரோஹித் சர்மா.. செம்ம!

சிட்னி: நடராஜன் எங்களுக்கு மிகப்பெரிய சொத்து, நடராஜன் இந்திய அணிக்கு சிறப்பான எதிர்காலம் போல காட்சி அளிக்கிறார் என்று இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. தனது அறிமுக போட்டியிலேயே தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட் எடுத்தார்.

அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தரும் 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இந்த நிலையில் நடராஜனின் பவுலிங்கை ரோஹித் சர்மா பாராட்டி உள்ளார். அதில் நடராஜன் எங்களுக்கு மிகப்பெரிய சொத்து. அவர் வெள்ளை பால் போட்டிகளிலேயே மிகவும் சிறப்பாக ஆடினார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய நடராஜன் அதே பார்மில் தற்போது ஆடி வருகிறார். தற்போது டெஸ்ட் போட்டியிலும் நடராஜன் சிறப்பாக ஆடுகிறார்.

சிறப்பு

சிறப்பு

இதுதான் நடராஜனுக்கு முதல் டெஸ்ட் போட்டி. ஆனாலும் கூட நடராஜன் மிகவும் துல்லியமாக, அதிக கவனத்துடன் பவுலிங் செய்து வருகிறார். அவர் பவுலிங் செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. முதல் போட்டியிலேயே அவர் நன்றாக பந்து வீசுகிறார்.

எதிர்காலம்

எதிர்காலம்

தான் எப்படி பவுலிங் செய்கிறோம். எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கிறோம் என்பது நடராஜனுக்கு தெரிந்து உள்ளது. இதுதான் இந்தியாவிற்கு தேவை. நாங்கள் அவரிடம் எதிர்பார்த்ததை நடராஜன் செய்து வருகிறார்.

துல்லியமான பவுலிங்

துல்லியமான பவுலிங்

நடராஜன் இந்திய அணிக்கு சிறப்பான எதிர்காலம் போல காட்சி அளிக்கிறார். வெகுசில முதல்தர போட்டிகளில்தான் நடராஜன் ஆடி இருக்கிறார். ஆனாலும் அவர் சிறப்பாக ஆடுகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் இப்படி ஆடுவது கடினம்.

 பாராட்டு

பாராட்டு

இந்திய அணியில் மூத்த பவுலர்கள் இல்லை. ஆனாலும் அதை பற்றி கவலையின்றி நடராஜன் நன்றாக ஆடி உள்ளார். மிகவும் கட்டுக்கோப்பாக நடராஜன் ஆடி வருவது பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கிறது என்று ரோஹித் சர்மா பாராட்டி உள்ளார்.

Story first published: Sunday, January 17, 2021, 9:43 [IST]
Other articles published on Jan 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+