
எப்படி
பீல்டிங் செய்து கொண்டு இருந்த போது காலில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறினார். இவருக்கு தற்போது ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. இவர் காலில் இருந்து எலும்பு பகுதியிலும், தசை பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

வருகிறார்
இந்த ஸ்கேன் ரிப்போர்ட்டின்படி உமேஷ் யாதவ் டெஸ்ட் தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் ஆட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் உமேஷ் யாதாவிற்கு மாற்று வீரராக தற்போது தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மாற்று வீரர்
இந்திய ஒருநாள் அணியில் சைனி காயம் காரணமாக நடராஜன் உள்ளே வந்தார். அதேபோல் டி 20 அணியில் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக நடராஜன் அணிக்குள் வந்தார். இந்த நிலையில் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

காயம்
இந்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது சைனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. நடராஜன் வலைப்பயிற்சியில் சிறப்பாக பந்து வீசி வரும் நிலையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications