
எப்படி
இந்த நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்சில் அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. பும்ரா 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட், சிராஜ் 2 விக்கெட் எடுத்தனர் . ஜடேஜாவும் ஒரு விக்கெட் எடுக்க ஆஸ்திரேலியா 195 ரன்களுக்கு சுருண்டது.

ஆனால்
ஆனால் இந்த போட்டியில் உமேஷ் யாதவ் சரியாக பவுலிங் செய்யவில்லை. ஒரு விக்கெட் கூட உமேஷ் யாதவ் எடுக்கவில்லை. இவர் புதிய பந்தில் சரியாக பந்து வீசவில்லை. அதேபோல் பந்து தேய்ந்த பிறகும் கூட உமேஷ் யாதவ் சரியாக பந்து வீசவில்லை.

நேற்று எப்படி
நேற்று நடந்த போட்டி முழுக்க உமேஷ் யாதவின் பவுலிங் மோசமாக இருந்தது. பவுன்சரை தவிர இவரிடம் நேற்று பெரிய டெக்னிக் இல்லை. சிராஜ் எளிதாக பந்தை ஸ்விங் செய்த போது, உமேஷ் யாதவ் அப்படி பந்தை ஸ்விங் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டார். இதுவரை 4 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உமேஷ் யாதவ் ஆடியுள்ளார்.

மோசம்
ஆனால் 4 சுற்று பயணத்திலும் உமேஷ் யாதவ் மோசமாக ஆடி சொதப்பி உள்ளார். இந்த நிலையில் உமேஷ் யாதவ் அடுத்த போட்டியில் இந்திய அணியில் இடம்பெறுவது கடினம் என்கிறார்கள். உமேஷ் யாதவிற்கு பதிலாக இந்திய அணியில் நடராஜன் அல்லது சைனி ஆட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

சைனி
உமேஷ் யாதவ் சொதப்பிய நிலையில் அடுத்த டெஸ்ட் போட்டியில் நடராஜன் அல்லது சைனி எடுக்கப்படலாம். சைனி வலைப்பயிற்சியில் சரியாக பந்து வீசுவது இல்லை. சைனியை விட நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்வதால் நடராஜனுக்கு ரஹானே வாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











