Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை எப்படி எடுக்கலாம்.. ஒரு பக்கம் கிளம்பிய எதிர்ப்பு.. டெஸ்ட் அணியில் நடராஜனுக்கு நோ? - பின்னணி!

சிட்னி: இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன் அறிமுகமாக தேர்வுக்குழுவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதற்கு முறையான காரணங்களை அவர்களை பட்டியலிட்டுள்ளனர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில நாட்களில் நடக்க உள்ளது. இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.

காயம் காரணமாக இந்திய ஆஸ்திரேலிய தொடரில் இருந்து உமேஷ் யாதவ் வெளியேறி உள்ளார். இவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும்.

ஏன்

ஏன்

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல்கள் வந்தது. நடராஜன் டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆவார் என்று கூறப்பட்டது. ஆனால் சில நிமிடங்களில் ஷரத்துல் தாகூர்தான் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க போகிறார் என்று செய்திகள் வெளியானது.

மாற்றம்

மாற்றம்

நடராஜன் தற்போது வலைப்பயிற்சியில் நன்றாக பந்து வீசுகிறார். ஷரத்துல் தாக்கூரும் வலைப்பயிற்சியில் நன்றாக பவுலிங் செய்கிறார். ஆனால் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார்கள்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன் அறிமுகமாக தேர்வுக்குழுவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது. தேர்வுக்குழு கமிட்டி உறுப்பினர்கள் இதற்கான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதற்கு முறையான காரணங்களை அவர்களை பட்டியலிட்டுள்ளனர்.

காரணம்

காரணம்

நடராஜன் நல்ல வீரர். ஆனால் அவர் டி 20, ஒருநாளில் ஆட கூடிய வீரர் . டெஸ்ட் பவுலர் இல்லை. நீண்ட நேரம் அவர் களத்தில் பவுலிங் செய்வது சிரமம். அதிக ஓவர்கள் வீசும் போது நிறைய வேரியேஷன் தேவை. நடராஜன் அப்படிப்பட்ட வீரர் இல்லை.

சைனி

சைனி

அதே சமயம் சைனி வலைப்பயிற்சியில் நன்றாக பவுலிங் செய்யவில்லை. இதனால் இந்திய அணியில் ஷரத்துல தாக்கூர் வருவதே நன்றாக இருக்கும். நடராஜன் இன்னும் முதல் தர போட்டிகளில் அதிகம் ஆட வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு அவசரப்பட்டு வாய்ப்பு கொடுக்க கூடாது.

காயம்

காயம்

இது அவருக்கு காயங்களை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என்று இந்திய அணியின் தேர்வுக்குழுவில் சிலர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நடராஜன் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Story first published: Thursday, December 31, 2020, 16:04 [IST]
Other articles published on Dec 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+