Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சந்தேகம்தான்.. வலியில் துடிக்கும் அஸ்வின்.. நடராஜனை கொண்டு வர ரஹானே திட்டம்.. 4 பேர் பார்முலா!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணியின் மூத்த வீரர் அஸ்வின் ஆட முடியாமல் போனால் நடராஜன் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. நான்காவது போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றும் எண்ணத்தில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

பல வீரர்கள் காயம் அடைந்து இருந்தாலும் எப்படியாவது சிறப்பாக ஆடி வெற்றிபெற வேண்டும் என்று இந்திய அணி உறுதியாக உள்ளது.

எப்படி

எப்படி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணியின் மூத்த வீரர் அஸ்வின் ஆட முடியாமல் போனால் நடராஜன் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். அஸ்வின் கடந்த போட்டியின் போதே உடலில் காயத்தோடு களமிறங்கினார். அதன்பின் ஆட்டத்தின் போதும் காயம் ஏற்பட்டது.

அஸ்வின்

அஸ்வின்

அஸ்வினுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அதன்பின் போட்டியின் போதே அவருக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டது. பின் தோள் பட்டையிலும் காயம் ஏற்பட்டது. இதில் முதுகில் உள்ள காயம் மட்டும் இன்னும் குணமாகவில்லை.

காயம் குணமாகவில்லை

காயம் குணமாகவில்லை

முதுகில் தற்போது இவருக்கு இருக்கும் காயம் காரணமாக கடுமையாக கஷ்டப்பட்டு வருகிறார். சரியாக எழுந்து நிற்க கூட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.இதனால் அடுத்த போட்டியில் இவர் ஆட முடியாமல் போக கூட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

நிலைமை மோசம்

நிலைமை மோசம்

ஒருவேளை அஸ்வின் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை என்றால் இந்திய அணியின் கேப்டன் ரஹானே தமிழக வீரர் நடராஜனை களமிறக்குவார். அதன்படி இந்திய அணி வாஷிங்க்டன் சுந்தர் என்ற ஒரு ஸ்பின் பவுலர் சிராஜ், ஷரத்துல் தாக்கூர், சைனி, நடராஜன் என்ற நான்கு ஸ்பீட் பவுலர்கள் உடன் களமிறங்கும். இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணியின் 4 ஸ்பீட் பவுலர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Wednesday, January 13, 2021, 13:07 [IST]
Other articles published on Jan 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+