வயதாகிவிட்டது.. எலும்பு முறிவு வேறு.. இந்திய அணியில் தூக்கப்படும் மூத்த வீரர்.. நடராஜனுக்கு செம லக்!
சிட்னி: இந்திய அணியில் அறிமுகமாகி இருக்கும் தமிழக வீரர் நடராஜன் வரும் நாட்களில் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்ற நிலையில் இந்திய அணி மீது பிசிசிஐ கோபத்தில் உள்ளது.
அதிலும் இந்திய அணி வீரர்கள் வெறும் 36 ரன்னிற்கு 9 விக்கெட்டுகளை இழந்தது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

சர்ச்சை
இந்த நிலையில் இந்திய அணியில் அறிமுகமாகி இருக்கும் தமிழக வீரர் நடராஜன் வரும் நாட்களில் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தற்போது டெஸ்ட் அணியின் மூத்த பவுலர் ஷமி காயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். தொடரில் மீதம் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இவர் பவுலிங் செய்ய மாட்டார்.

நடராஜன்
ஷமிக்கு காயம் ஏற்படுவது இது புதிது இல்லை. இதற்கு முன்பே ஷமி பல முறை காயம் காரணமாக கஷ்டப்பட்டுள்ளார். இடையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு நடக்க முடியாத நிலை கூட உருவாகி உள்ளது. அப்போதெல்லாம் இவர் மீண்டும் கிரிக்கெட்டே விளையாட கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

நிலைமை
இந்த நிலையில் அதன்பின் குணமாகி இந்திய அணிக்குள் வந்தவருக்கு மீண்டும் அடுத்தடுத்து இரண்டு முறை காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மொத்தமாக ஷமியின் மணிக்கட்டு முறிந்துள்ளது. இவருக்கு ஏற்கனவே வயது ஆகி வரும் நிலையில் தற்போது மணிக்கட்டு முறிந்துள்ளது.

போச்சு
இதனால் இந்திய டி 20 அணியில் ஷமிக்கு வரும் நாட்களில் வாய்ப்பு கிடைக்காது. கொஞ்சம் கொஞ்சமாக இவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு பிற வீரர்களுக்கு வழங்கப்படும். அடுத்த வருடம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கு தயார் ஆகும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறுகிறார்கள்.

நடராஜன்
இதனால் ஷமியின் இடத்தை தமிழக வீரர் நடராஜன் நிரம்புவார் என்று கூறுகிறார்கள். அதாவது ஷமிக்கு மாற்று வீரராக நடராஜன் அணிக்குள் வருவார். இந்திய அணியில் நடராஜன் விரைவில் நிரந்தரமாக இடம்பிடிக்க போகிறார் என்கிறார்கள். புவேனஸ்வர்குமார், ஷமி இருவரும் காயம் காரணமாக அடிக்கடி கஷ்டப்படுவதால் ஒரு வீரருக்கு பதிலாக நடராஜன் கண்டிப்பாக அணிக்குள் வருவார் என்கிறார்கள்.

டெஸ்ட்
தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடரிலும் கூட நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று.கூறப்படுகிறது. டெஸ்ட் தொடரில் இருந்து ஷமி வெளியேறி உள்ளார். இதனால் இவருக்கு பதிலாக நடராஜன் வர வாய்ப்புள்ளது. மீதம் உள்ள டெஸ்ட் போட்டிகளில் யாரை அணியில் எடுக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications