Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஊருக்கு திருப்பும் முன் கோலி சொன்ன விஷயம்.. தட்டாமல் செய்த நடராஜன்.. எம்சிஜியில் நடந்த மாஸ் சம்பவம்!

சிட்னி: இந்திய அணியின் இளம் வீரர் நடராஜன் இன்று நடந்து வரும் வலைப்பயிற்சியில் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

நிலைமை என்ன

நிலைமை என்ன

இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி நேற்றுதான் ஆஸதிரேலியாவில் இருந்து டெல்லிக்கு திரும்பினார். அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க உள்ளதால் அவர் இந்தியா திரும்பினார்.

இந்தியா வந்தார்

இந்தியா வந்தார்

இந்த நிலையில் நேற்று விமான நிலையம் செல்லும் முன் கேப்டன் கோலி இந்திய அணி வீரர்களுடன் மீட்டிங் நடத்தினார். எப்படி பயிற்சி மேற்கொள்ள வேண்டும், போட்டியின் போது எப்படி ஆட வேண்டும் என்பது குறித்து கோலி அறிவுரைகளை வழங்கினார்.

வலைப்பயிற்சி

வலைப்பயிற்சி

முக்கியமாக வலைப்பயிற்சியில் எப்படி ஆட வேண்டும். எப்படி வலைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளை கோலி வழங்கினார். முக்கியமாக நடராஜன், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் வலைப்பயிற்சியில் எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பது குறித்தும் கோலி பேசினார். இதில் நடராஜனுக்கு கோலி தனிப்பட்ட முறையில் அறிவுரைகளை வழங்கினார்.

 அறிவுரை

அறிவுரை

இந்த நிலையில் தற்போது எம்சிஜி மைதானத்தில் நடக்கும் பயிற்சியில் நடராஜன் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். நடராஜன் வலைப்பயிற்சியில் சிறப்பாக கோலி சொன்னபடியே பவுலிங் செய்து வருகிறார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் டெஸ்டில் லென்த் பந்தில்தான் அதிகம் அவுட் ஆனார்கள்.

நடராஜன்

நடராஜன்

நடராஜன் அதேபோன்ற பந்துகளை வீசினார். கோலி கொடுத்த அறிவுரைகளை பின்பற்றி நடராஜன் பவுலிங் செய்து வருகிறார். ஆனால் இவருக்கு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படாது, வலைப்பயிற்சியில் மட்டுமே பவுலிங் செய்வார் என்று கூறப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, December 23, 2020, 10:00 [IST]
Other articles published on Dec 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+