Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசியில் அது நடக்கவே போகிறதா? நடராஜன் வெளியிட்ட வைரல் புகைப்படம்.. இந்திய அணியில் செம டிவிஸ்ட்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற நம்பிக்கையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பவுலர் உமேஷ் யாதவ் காயம் அடைந்தார். இரண்டாவது இன்னிங்சில் காயம் அடைந்த உமேஷ் யாதவ் பாதியில் வெளியேறினார்.

ஆட மாட்டார்

ஆட மாட்டார்

இதனால் மீதம் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் உமேஷ் யாதவ் ஆட மாட்டார். இவருக்கு மாற்று வீரராக தமிழக வீரர் நடராஜன் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இன்னொரு பக்கம் முகமது ஷமியும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.

காயம்

காயம்

முகமது ஷமி எலும்பு முறிவு காரணமாக வெளியேறி உள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஷர்த்துல் தாக்கூர் அணிக்குள் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர்கள் இருவரில் அடுத்த போட்டியில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கேள்வி எழுந்தது. நடராஜன் அல்லது ஷர்த்துல் தாக்கூர் இருவரில் யார் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று கேள்வி நிலவி வந்தது.

கேள்வி

கேள்வி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இவர் வலைப்பயிற்சியில் நன்றாக பவுலிங் செய்து வருகிறார். ஷர்த்துல் தாக்கூரை விட இவர் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார் என்பதால் இவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.

எப்படி

எப்படி

இந்த நிலையில்தான் நடராஜன் வெளியிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்திய டெஸ்ட் அணியின் உடையை அணிந்து இவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். டெஸ்ட் அணியின் உடையை அணிவதில் பெருமையாக இருக்கிறது என்று நடராஜன் குறிப்பிட்டுள்ளார்.

ஆடுவார்?

ஆடுவார்?

இதனால் நடராஜன் அடுத்த போட்டியில் ஆட போகிறார் என்கிறார்கள். இதை உணர்த்தும் வகையில்தான் அவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அடுத்த போட்டியில் களமிறங்குவது குறித்து இவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கலாம், அதனால் இவர் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கலாம் என்கிறார்கள்.

Story first published: Tuesday, January 5, 2021, 10:39 [IST]
Other articles published on Jan 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+