இனிதான் சிக்கலே.. நடராஜன் கவனமாக இருக்க வேண்டும்.. வார்னிங் கொடுத்த சேவாக்.. என்ன நடந்தது?
டெல்லி: நடராஜன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இனிதான் அவருக்கு சிக்கலே என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பிடித்து இருக்கும் நடராஜன் தற்போது அணிக்குள் கலக்கி வருகிறார். இவரை ஐபிஎல் தொடருக்குள் கொண்டு வந்ததில் முன்னாள் வீரர் சேவாக்கிற்கு முக்கிய பங்கு உள்ளது.
பஞ்சாப் அணியில் 2017ல் நடராஜன் சேருவதற்கு சேவாக்தான் முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் நடராஜனுக்கு தொடர் ஆலோசனைகளை வழங்கி வரும் சேவாக்.. முக்கியமான அறிவுரை ஒன்றை அவருக்கு வழங்கி உள்ளார்.

சேவாக்
இதுகுறித்து சேவாக் தனது உரையில், நடராஜன் வேகமாக முன்னேறி வருகிறார். அவர் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அவர் வேகமாக முன்னேற முன்னேற அவருக்கு பிரச்சனையும் அதிகரிக்கும். நடராஜன் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.

அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும்
அவர் தொடர்ந்து அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் எதிரணிக்கு அவர் சவாலான வீரராக தொடர முடியும். வரும் நாட்களில் இவர் பவுலிங் எப்படி என்று மற்ற வீரர்களுக்கு புரியும்.

சிக்கல் வரும்
அப்போதுதான் நடராஜனுக்கு சிக்கல் வரும். நடராஜன் எப்படி போடுவார், எப்படி பவுலிங் செய்வார் என்று எதிரணிக்கு தெரிந்து விடும். அப்போதுதான் நடராஜன் சிக்குவார். அதனால் அதற்கு நடராஜன் பல புதிய விஷ்யங்களையே கற்று, தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.

திட்டங்கள்
புதிய புதிய திட்டங்களை நடராஜன் வகுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் நிலைக்க முடியும். ஜாகீர் கான், நெஹ்ரா போன்ற இடது கை பந்து வீச்சாளர்கள் உடன் நடராஜனை நேரம் செலவழிக்க வேண்டும்.

புதிய விஷயம்
இதன் மூலம் நடராஜன் புதிய விஷயங்களை கற்க முடியும். ஜாகீர் கான் , நெஹ்ரா போன்றவர்கள் நடராஜனுக்கு உதவியாக இருப்பார்கள். இவர்கள் கற்றுக்கொண்ட விஷயம் நடராஜனுக்கு சிறந்த பாடமாக அமையும் என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications