Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர்கள்தான் எதிர்காலம்.. லிஸ்டில் இடம்பிடித்த 3 பேர்.. உள்ளே வந்த நடராஜன்.. பிசிசிஐ எடுக்கும் முடிவு

டெல்லி: 2020ல் இந்திய கிரிக்கெட் உலகில் நம்பிக்கை தர கூடிய மூன்று முக்கியமான வீரர்கள் அறிமுகம் ஆகியுள்ளார்.

கொரோனா காரணமாக 2020ல் கிரிக்கெட் உலகமே ஸ்தம்பித்து போனது. மே மாதத்திற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடக்க தொடங்கியது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா ஆடி வரும் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்திய அணி

இந்திய அணி

அந்த வகையில் 2020ல் இந்திய கிரிக்கெட் உலகில் நம்பிக்கை தர கூடிய மூன்று முக்கியமான வீரர்கள் அறிமுகம் ஆகியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி இருக்கும் சுப்மான் கில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சிறப்பாக ஆடி நம்பிக்கை அளித்து வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய ஒப்பனர்கள் திணறி வந்தனர்.

யார்

யார்

பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் என்று பலரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக திணறும் நிலையில் சுப்மான் கில் தனது தனித்துவத்தை நிரூபித்துள்ளார். புல் ஷாட், கவர் டிரைவ் இவர் ஆடும் விதம் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அதிலும் பாட் கும்மின்ஸ், ஸ்டார்க், ஹசல்வுட், லைன் என்று சுப்மான் கில் உலகில் தலைசிறந்த பவுலர்களை கூட சிறப்பாக எதிர்கொள்கிறார்.

எதிர்காலம்

எதிர்காலம்

இந்திய அணியில் வரும் நாட்களில் சுப்மான் கில் மிக சிறந்த வீரராக உருவெடுப்பார் என்பது இந்த ஆஸ்திரேலிய தொடர் மூலமும் உறுதியாகி உள்ளது. இன்னொரு பக்கம் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி உள்ள சிராஜ் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். முதல் இன்னிங்சில் மார்னஸ் விக்கெட் உட்பட 2 விக்கெட்டுகளை சிராஜ் எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்

இரண்டாவது இன்னிங்ஸ்

அதேபோல் இன்னொரு பக்கம் இரண்டாவது இன்னிங்சில் 3 முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார். அறிமுக போட்டியிலேயே, அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் 5 விக்கெட்டுகளை எடுப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை. இவர் முதல் தர போட்டிகளில் ஆடுவது போல சிறப்பாக ஆடி வரும் நிலையில் இந்திய அணியில் விரைவில் நிரந்தர இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

நடராஜன்

நடராஜன்

இன்னொரு பக்கம் இந்திய அணியில் இந்த வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக தமிழக வீரர் நடராஜன் உருவெடுத்துள்ளார். அறிமுக ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் எடுத்து நடராஜன் நம்பிக்கை கொடுத்தார்.அதன்பின் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட், நேற்று நடந்த போட்டியில் 2 விக்கெட் என்று பெரிய அளவில் நடராஜன் கவனம் ஈர்த்து இருக்கிறார்.

சிறப்பு

சிறப்பு

கடைசி டி 20 போட்டியிலும் அவர் ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தற்போது மேற்கொண்டு வரும் வலைபயிற்சியில் தமிழக வீரர் நடராஜன் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இதனால் டெஸ்ட் அணியிலும் விரைவில் இவர் இடம்பெற வாய்ப்புள்ளது.

முக்கியம்

முக்கியம்

இந்த வருடம் இந்திய அணி கண்டுபிடித்த மூன்று பெரும் வீரர்களாக இவர்கள் உருவெடுத்துள்ளார். வரும் நாட்களில் பிசிசிஐ இவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் என்கிறார்கள். முக்கியமாக டி 20 உலகக் கோப்பையில் நடராஜன் தேர்வாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Story first published: Tuesday, December 29, 2020, 23:09 [IST]
Other articles published on Dec 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+