சர்வதேச அரங்கில் ஒலித்த தமிழ்.. எவ்வளவு பணிவான குணம் பாருங்க.. நடராஜன் பேட்டியில் இதை கவனித்தீர்களா?
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரில் சிறப்பாக ஆடிய நடராஜன் 3வது டி 20 போட்டிக்கு பின் தமிழில் பேசியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இவர் பேட்டி பல்வேறு முக்கிய விஷயங்களுக்காக வைரலாகி உள்ளது.
இந்திய அணியில் அறிமுகம் ஆகி இருக்கும் தமிழக வீரர் நடராஜன் உலகம் முழுக்க வைரலாகி வருகிறார். தமிழக மக்கள் மட்டுமின்றி.. உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனை பாராட்டி வருகிறார்.
இந்திய அணியில் ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் நடராஜன் அறிமுகம் ஆனார். அதன்பின் டி 20 தொடரில் மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஆடினார். நேற்றைய போட்டிக்கு பின் நடராஜனிடம் கோலி இந்திய அணியின் டி 20 கோப்பையை கொடுத்தார்.

பேட்டி
இந்த போட்டிக்கு பின் சோனி தொலைக்காட்சிக்கு முரளி கார்த்திக் எடுத்த பேட்டியில் நடராஜன் தமிழில் பேசினார். இந்திய கிரிக்கெட் உலகில் பல தமிழக வீரர்கள் சிறப்பாக ஆடி உள்ளனர். தினேஷ் கார்த்திக், அஸ்வின், பாலாஜி என்று பல வீரர்கள் தங்கள் முத்திரையை பதித்து உள்ளனர். ஆனால் அவர்கள் எல்லோருக்கும் சரளாமாக இந்தி, ஆங்கிலம் தெரியும்.

இந்தி
இதனால் பெரும்பாலும் போட்டிக்கு பின் பேட்டி அளிக்கும் போது அவர்கள் எல்லோரும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசுவார்கள்.ஆனால் நடராஜன் தமிழில் மட்டுமே பேசுகிறார். தமிழ் தெரியாத சக வீரர்களிடம் ஆங்கிலத்தில் சரளாமாக பேசுகிறார். கேப்டன் கோலி, ஹர்திக் பாண்டியாவுடன் நடராஜன் நட்பாகிவிட்டார். இவர்களுடன் நடராஜன் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்.

ஆங்கிலம்
இன்னொரு பக்கம் ராகுல், சஞ்சு சாம்சன், மயங்க், வாஷிங்க்டன் சுந்தர் போன்ற தமிழ் தெரிந்த வீரர்களிடம் தமிழில் பேசிகிறார். இந்த நிலையில்தான் நடராஜன் ஒருவேளை மேன் ஆப் தி மேட்ச் அல்லது சீரிஸ் விருது வாங்கி தமிழில் பேசினால் எப்படி இருக்கும் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

நெட்டிசன்கள்
பல நெட்டிசன்கள் ஆசைப்பட்டது போலவே நேற்று நடராஜன் தமிழில் பேசினார். அதுவும் மிக இயல்பாக, எந்த விதமான அலங்காரமும் இன்றி சாதாரணமாக நம்ம ஊர் பையன்டா இவன் என்பது போல பேசினார். இதற்கு முன்பே ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் போட்டியில் ஆடும் போதே நடராஜன் தமிழில்தான் வீடியோ பேட்டிகளை கொடுத்து இருக்கிறார்.

பிசிசிஐ
பிசிசிஐ வெளியிட்ட சில வீடியோக்களில் கூட இவர் தமிழில்தான் பேசினார். சர்வதேச அரங்கில் நடராஜனால் தமிழ் மீண்டும் ஒலிக்க தொடங்கி உள்ளது. தமிழகம் சர்வதேச உலகிற்கு கொடுத்த முக்கியமான நபர்களில் ஒருவராக நடராஜன் உருவெடுக்க தொடங்கி உள்ளார். ஆள் வளர வளர இவருக்கு பணிவும் சேர்ந்து வளருவதால்.. இன்னும் பல உயரங்களை இவர் எட்டுவார் என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலம்
இவர் சக வீரர்களிடம் ஆங்கிலத்தில் பேசினாலும்.. கிரிக்கெட்டில் அதிகம் இந்தி புழங்குவதால் அடிப்படை இந்தி வார்த்தைகளையும் கற்றுக்கொண்டு இருக்கிறார். கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் சில முக்கியமான வார்த்தைகளை இவர் கற்றுக்கொண்டு இருக்கிறார். இதுவும் கூட இந்திய வீரர்கள் இவரிடம் எளிதாக நெருக்கம் காட்ட முக்கிய காரணம் ஆகும்.


Click it and Unblock the Notifications