Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேங்க் யூ சோ மச் பிரதர்.... டேவிட் வார்னருக்கு நன்றி சொன்ன நடராஜன்... எதுக்கு?

சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடர்களில் 3 வடிவங்களிலும் தனது அறிமுக ஆட்டத்தை ஆடி முத்திரை பதித்துள்ளார் நடராஜன்.

இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி நடராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து டிவீட் செய்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலுக்கு நடராஜனும் நன்றி தெரிவித்துள்ளார்.

முத்திரை பதித்த நடராஜன்

முத்திரை பதித்த நடராஜன்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெற்ற நிலையில், இதில் 2 தொடர்களை இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இந்த 3 வடிவங்களிலும் தமிழக வீரர் நடராஜன் தன்னுடைய அறிமுக போட்டிகளை ஆடினார். நெட் பௌலராக ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற அவர் இந்த 3 வடிவங்களிலும் தனது முத்திரையை பதித்து கவனம் பெற்றுள்ளார்.

கனவாக இருந்த டெஸ்ட்

கனவாக இருந்த டெஸ்ட்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் வெற்றியை அடுத்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து டிவீட் செய்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கனவாக இருந்ததாகவும் மேலும் இந்த தொடரில் கடினமான தடைகள் பலவற்றை இந்திய அணி கடந்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டேவிட் வார்னர் பாராட்டு

டேவிட் வார்னர் பாராட்டு

இதற்கு பதிலளித்த ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், வெல்டன் லெஜெண்ட் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய முதல் குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்பாமல் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராத்திற்காகவும் ஆஸ்திரேலிய தொடரிலும் சிறப்பாக விளையாடியது ஆச்சர்யம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

நன்றி தெரிவித்த நடராஜன்

நன்றி தெரிவித்த நடராஜன்

டேவிட் வார்னரின் இந்த பாராட்டிற்கு நடராஜனும் உடனடியாக நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளார். இவர்கள் இருவரும் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக இணைந்து விளையாடிய நிலையில், இருவருக்குள்ளும் சிறப்பான புரிதல் காணப்படுகிறது.

Story first published: Friday, January 22, 2021, 15:41 [IST]
Other articles published on Jan 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+