Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெறும் 15 நிமிடம்தான்.. சொல்லி வைத்து கதையை முடித்த நடராஜன்.. மிரண்ட வீரர்கள்.. வைரலாகும் வீடியோ!

சிட்னி: இந்திய அணி தற்போது மேற்கொண்டு வரும் வலைபயிற்சியில் தமிழக வீரர் நடராஜன் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமாக ஆடி இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தியா தயாராகி வருகிறது.

சிறப்பு

சிறப்பு

இந்திய அணி தற்போது மேற்கொண்டு வரும் வலைபயிற்சியில் தமிழக வீரர் நடராஜன் மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பே இவர் சிறப்பாக நெட் பயிற்சியில் பவுலிங் செய்தார். இந்த நிலையில் இரண்டாவது போட்டிக்கு முன்பும் தற்போது சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

பவுலிங்

பவுலிங்

முதல் போட்டிக்கு முன் நடந்த வலைப்பயிற்சியில் நடராஜன் மூன்று விக்கெட்டுகளை அரை மணி நேரத்தில் எடுத்தார். ரஹானே, புஜாரா, கோலியின் விக்கெட்டை அடுத்தடுத்து நடராஜன் எடுத்தார். நடராஜன் விக்கெட் எடுத்த விதம் முன்பே பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

இப்போது எப்படி

இப்போது எப்படி

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பும் நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். வலைப்பயிற்சியில் நடராஜன் தொடர்ந்து யார்க்கர், பவுன்சர், ஸ்லோ பால் என்று மாறி மாறி பந்துகளை வீசி உள்ளார். இன்று நடந்த வலைப்பயிற்சியில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரின் விக்கெட்டை நடராஜன் எடுத்துள்ளார்.

விக்கெட் எடுத்தார்

விக்கெட் எடுத்தார்

மிக துல்லியமான லென்தில் பவுலிங் செய்து அசத்தி உள்ளார். இவர் பவுலிங் செய்ய தொடங்கி வெறும் 15 நிமிடங்களில் புஜாரா மற்றும் ரஹானேவின் விக்கெட்டுகளையே எடுத்து இருக்கிறார். சொல்லிவைத்தது போல கடந்த முறை பயிற்சியின் போது எப்படி விக்கெட் எடுத்தாரா, அதேபோல் இன்றும் விக்கெட் எடுத்துள்ளார்.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன் இல்லை. ஆனாலும் வலைப்பயிற்சியில் நடராஜன் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார். இவரின் பவுலிங்கை இந்திய தேர்வுக்குழு தீவிரமாக கவனித்து வருகிறது.

Story first published: Thursday, December 24, 2020, 13:03 [IST]
Other articles published on Dec 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+