அந்த 3 மூத்த வீரர்களும் வேண்டாம்.. நடராஜனை அவசரமாக அழைக்கும் இந்திய அணி.. பின்னணியில் பரபர காரணம்!
சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் நடராஜனை களமிறக்க கோலி முடிவு செய்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் உடனே மீண்டும் வந்து இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வென்றுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசினார்கள். இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோஹித், அஸ்வின் அடித்த சதம், அஸ்வின் அக்சர் எடுத்த 5 விக்கெட்டுகள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது.

இங்கிலாந்து
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் நடராஜனை களமிறக்க கோலி முடிவு செய்துள்ளார். அதன்படி தற்போது மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பும்ரா ஆடுவார். அதன்பின் அவருக்கு டெஸ்ட் உலகக் கோப்பை தொடருக்காக ஓய்வு கொடுக்கப்படும்.

டி 20 போட்டி
பின்னர் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு அணியில் மீண்டும் ஷமி, புவனேஷ்வர் குமார், சைனி ஆகியோர் வருவார்கள். இதில் சைனியை நம்பி களமிறக்க முடியாது. அதேபோல் ஷமி காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் டி 20 போட்டிகளில் மட்டுமே பவுலிங் செய்வார்.

காயம்
புவனேஷ்வர்குமார் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார். இதனால் ஒருநாள் அணியில் புவனேஷ்வர்குமார், நடராஜன், பாண்டியா ஆகியோர் பவுலிங் செய்ய உள்ளனர். டி 20 அணியில் ஷமி, நடராஜன், ஷரத்துல் தாக்கூர் ஆகியோர் ஆட உள்ளனர் என்று கூறப்படுகிறது.

எப்படி
இதில் பும்ராவிற்கு மாற்றாக நடராஜன் இரண்டு அணியிலும் ஆடுவார்.ஷமி, புவனேஷ்வர் குமார், ஷரத்துல் தாக்கூர் யாருக்குமே இந்திய அணியில் இந்த இரண்டு பார்மெட்டிலும் ஆட வாய்ப்பு இல்லை. இவர்கள் மூன்று பேருக்கு பதிலாக நடராஜன் மட்டுமே இரண்டு பார்மெட்டிலும் ஆடுவார் என்று கூறப்படுகிறது.

காரணம்
நடராஜனை டி 20 உலகக் கோப்பை தொடரில் பயன்படுத்த கோலி திட்டமிட்டுள்ளார். இதனால் அதற்கு முன் சர்வதேச போட்டிகளில் நடராஜனை ஆட வைக்க கோலி முடிவு செய்துள்ளார். இதன் பொருட்டே அவருக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications