கண்டிப்பாக அவருக்கு இடம் உண்டு.. விரைவில் நடராஜனுக்கு செல்லும் அழைப்பு..கோலி வைத்திருக்கும் திட்டம்
சென்னை: இந்திய அணியில் தற்போது டெஸ்ட் தொடரில் நடராஜன் ஆடவில்லை என்றாலும் மற்ற போட்டிகளில் நடராஜன் ஆடுவார் என்று கூறப்படுகிறது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. சென்னையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட்
இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் நடராஜன் அணியில் இடம்பெறவில்லை. இவர் குழந்தை பிறப்பு காரணமாக விடுப்பு எடுத்துள்ளார். அதேபோல் இன்னொரு பக்கம் தொடர்ந்து கிரிக்கெட் ஆடியதால் ஓய்வு எடுத்துள்ளார். இதனால் டெஸ்ட் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

வாய்ப்பு
இந்திய அணியில் தற்போது டெஸ்ட் தொடரில் நடராஜன் ஆடவில்லை என்றாலும் மற்ற போட்டிகளில் நடராஜன் ஆடுவார் என்று கூறப்படுகிறது. அதன்படி இவருக்கு ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வைட் பால் பார்மெட் போட்டிகளில் இவர் நிரந்தரமாக ஆட போகிறார் என்கிறார்கள்.

புவனேஷ்வர் குமார்
இந்திய அணியில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் புவனேஷ்வர் குமார் இனி அணிக்குள் இடம்பெறுவது கஷ்டம் என்கிறார்கள். இதனால் நடராஜன், பும்ரா, ஷமி (அல்லது சிராஜ்) ஆகிய மூன்று பேர்தான் ஒருநாள் அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். பும்ரா மூன்று விதமான அணிகளிலும் ஆடுவார்.

டி 20
இதற்கான அழைப்பு விரைவில் நடராஜனுக்கு செல்லும். அதேபோல் இந்திய டி 20 அணிகளில் பும்ரா , நடராஜன் ஆகிய இரண்டு பேரும் ஆடுவார்கள். கூடுதலாக ஷமி அல்லது புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்கள் அணிக்குள் வர வாய்ப்புள்ளது. டி 20 உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்து கோலி இந்த முடிவை எடுத்துள்ளார்.

வாய்ப்பு இல்லை
இதனால் இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன் இனி இடம்பெற வாய்ப்பு குறைவு என்கிறார்கள். பொதுவாக கோலி மூன்று பார்மெட்டிற்கும் வெவ்வேறு அணிகளை தேர்வு செய்வார். முக்கிய வீரர்களை தவிர மற்றவர்கள் மூன்றுக்கு பார்மெட்டிலும் ஆட மாட்டார்கள். இதனால் நடராஜனும் டெஸ்ட் அணியில் ஆட வாய்ப்பில்லை என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications