
எப்படி
இந்த நிலையில் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறுவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. அதன்படி இந்திய அணியின் மூத்த வீரர் முகமது ஷமி காயம் காரணமாக கஷ்டப்பட்டு வருகிறார். இவரின் மணிக்கட்டு எலும்பு மொத்தமாக முறிந்துவிட்டது.

முறிவு
இதன் காரணமாக இன்னும் 2-3 மாதங்களுக்கு இவர் கிரிக்கெட் விளையாட முடியாது. இன்னொரு பக்கம் இந்திய அணியின் இன்னொரு மூத்த பவுலர் புவனேஷ்வர் குமாருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இவர் ஆஸ்திரேலிய தொடரில் கலந்து கொள்ளவில்லை.

இன்னும் 6 மாதம்
இன்னும் 6 மாதங்களுக்கு இவர் இந்திய அணியில் ஆட மாட்டார். 2021 ஐபிஎல் தொடரில்தான் இவர் இனி நேரடியாக கலந்து கொள்வார். இதனால் இவரும் இந்திய அணியில் இடம்பெற மாட்டார். இவர் அதிக போட்டிகளில் ஆட மாட்டார்கள் என்பதால் டி 20 உலகக் கோப்பை தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் போக வாய்ப்புகள் உள்ளது.

நடராஜன்
இதனால் புவனேஷ்வர் குமாருக்கு நிரந்தர மாற்று வீரராக நடராஜன் அணியில் சேர்க்கப்படுவார் என்று கூறுகிறார்கள். ஆம் ஷமிக்கு மாற்றாக ஷரத்துல் தாக்கூர் அல்லது இஷாந்த் சர்மா இந்திய ஒருநாள் அணிக்குள் வருவார்கள். இன்னொரு பக்கம் நடராஜன் புவனேஷ்வர் குமாருக்கு மாற்றாக வருவார் என்கிறார்கள்.

இந்திய அணி
இதன் மூலம் நடராஜன் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது. இதனை மூலம் இவர் அடுத்த வருடம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பையிலும் வாய்ப்பு பெறுவார் என்று கூறப்படுகிறது. இதனால் அடுத்த வருடம் முழுக்க நடராஜனுக்கு சிறப்பான வருடமாக இருக்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











