For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நடராஜனுக்கு கொடுக்கப்பட்ட அந்த டாஸ்க்.. உடலை குறி வைத்து துல்லியமாக வீசும் நட்டி.. தரமான பதிலடி!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் ஆஸி. வீரர்களின் உடலை குறி வைத்து தாக்கும் வகையில் பவுலிங் செய்து வருகிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்லும் என்பதால் இந்த போட்டி அதிக கவனம் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஸ்மித் - கிரீன் நிதானமாக ஆடி வருகிறார்கள். இதுவரை ஆஸ்திரேலியா 4 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட ஆஸ்திரேலியா 222 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது.

எத்தனை

எத்தனை

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் ஆஸி. வீரர்களின் உடலை குறி வைத்து தாக்கும் வகையில் பவுலிங் செய்து வருகிறார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸி பவுலர்கள் தொடர்ந்து இந்திய வீரர்களை தாக்கும் வகையில் பவுலிங் செய்தனர். இந்திய பேட்ஸ்மேன்களை குறி வைத்து தொடர்ந்து பவுலிங் செய்தனர்.

 தாக்கி காயம்

தாக்கி காயம்

உடலை தாக்கி காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பவுலிங் செய்தனர். வயிறு மற்றும் நெஞ்சு உயரத்திற்கு பவுலிங் செய்தனர். இதனால்தான் இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, ஷமி போன்ற வீரர்கள் காயம் அடைந்தனர். இந்திய அணியில் இப்படி ஆக்ரோஷமாக தாக்க கூடிய வீரர்கள் யாரும் இல்லை.

சைனி

சைனி

சைனி மட்டுமே தனது பவுன்சர்கள் மூலம் பேட்ஸ்மேன்களை தாக்கும் வகையில் பவுலிங் செய்வார். ஆனால் காயம் காரணமாக சைனி இன்று அதிகமாக ஓவர்களை வீசவில்லை. இதையடுத்து சைனியின் பணி இன்று நடராஜனுக்கு கொடுக்கப்பட்டது. பேட்ஸ்மேன்களை குறி வைக்கும் டாஸ்க் நடராஜனுக்கு கொடுக்கப்பட்டது.

நடராஜன்

நடராஜன்

அதை நடராஜன் தற்போது வரை சிறப்பாக செய்து வருகிறார். நடராஜன் வீசிய ஒரே ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் மூன்று முறை வயிற்றில் அடி வாங்கினார். துல்லியமான உயரத்தில் நடராஜன் வீசிய பந்து நேரடியாக கிரீன் வயிற்றில் சென்று அடித்தது.

ஸ்மித்

ஸ்மித்

இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தும் இதேபோல் நடராஜன் பவுலிங்கில் இரண்டு முறை காயம் அடைந்தார். ஆஸ்திரேலிய பவுலர்கள் அட்டாக்கிங் பவுலிங் செய்வது போல நடராஜனும் செய்து வருகிறார். வயிற்றில் லேசாக காயம் அடைந்த கிரீன் கொஞ்சம் திணறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 18, 2021, 10:23 [IST]
Other articles published on Jan 18, 2021
English summary
Natarjan doing attacking style bowling for team India in single over against Australia in the last test.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+