Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இடது கன்னத்தில் காதலியின் "இச்".. வலது கன்னத்தில் சந்தோஷம்.. ரசித்து சிரித்த ஹர்டிக் பான்ட்யா

மும்பை: கிரிக்கெட் வீரர் ஹர்டிக் பான்ட்யாவும், அவரது காதலி நதாஷா ஸ்டான்கோவிக்கும் இடம் பெற்றுள்ள ஒரு சூப்பர் ரொமான்டிக் செல்பி பான்ட்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

Sachin Tendulkar's rare bowling records

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் பான்ட்யாவை நெருங்கி நிற்கும் நதாஷா, அவரது கன்னத்தில் முத்தமிட்டிருப்பதுதான். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. கமெண்டுகளும் குவிந்து கொண்டுள்ளன.

ஹர்டிக் பான்ட்யாவும், நதாஷாவும் காதலர்கள். விரைவில் திருமணம் செய்யவுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் அவ்வப்போது புகைப்படம் அல்லது வீடியோவை சமூக வலைதளத்தில் போடத் தவறுவதில்லை. இவர்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இவர்கள் சும்மா இருந்தாலும் அவர்கள் விட மாட்டார்கள்.

நடிகை நதாஷா

நடிகை நதாஷா

செர்பிய நாட்டைச் சேர்ந்தவர் நதாஷா. அங்கு நடிகையாக இருக்கிறார். ஜனவரி 1ம் தேதிதான் இவர்களுக்குத் திருமணம் நிச்சயமானது. திருமணத்திற்காக காத்துள்ளனர். அவ்வப்போது இருவரும் ஜாலியான புகைப்படம், வீடியோவை போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹர்டிக் பான்ட்யா ஒரு புகைப்படத்தைப் போட்டுள்ளார். அது வைரலாகியுள்ளது.

நெருக்கமான புகைப்படம்

நெருக்கமான புகைப்படம்

இந்தப் புகைப்படத்தில் இருவரும் அணைத்தபடி நெருங்கி நிற்கின்றனர். பான்ட்யாவின் இடது கன்னத்தில் முத்தமிட்டுள்ளார் நதாஷா. பான்ட்யாவின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. இந்தப் புகைப்படத்திற்கு நதாஷா ஹார்ட்டின் விட்டு கமெண்ட் பண்ணியுள்ளார். ரசிகர்களும் விடவில்லை. அடோரபிள், கிரேட் கப்பிள் என்று கமெண்டுகளை வீசிக் கொண்டுள்ளனர்.

கொரோனா லாக்டவுன்

கொரோனா லாக்டவுன்

கொரோனா லாக்டவுன் காரணமாக தனது வீட்டினருடன் பொழுதைக் கழித்து வருகிறார் பான்ட்யா. இவரும் நதாஷாவும் அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்களை ஷேர் செய்து வருகின்றனர். ரசிகர்களுக்கும் அது நன்றாக பொழுதைக் கழிக்க உதவுகிறது. சமையல் செய்வது முதல் விதம் விதமாக இருவரும் புகைப்படங்களைப் போட்டுக் கொண்டுள்ளனர்.

பாட்டுப் பாடி வீடியோ

பாட்டுப் பாடி வீடியோ

சமீபத்தில் இந்திப் பாடல் ஒன்றை பாடி அந்த வீடியோவை போட்டிருந்தார் ஹர்டிக் பான்ட்யா. அதில் அவரது சகோதரர் கிருனாள் பாண்ட்யாவும் உடன் பாடியிருந்தார். அண்ணனும் தம்பியுமாக பாடிய இந்த வீடியோ அவரது ரசிகர்களிடையே ஹிட் ஆனது. இந்த நிலையில்தான் காதலியுடன் சுவாரஸ்யமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பான்ட்யா.. கல்யாணம் முடியட்டும். அதுவரைக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்கப்பா ரெண்டு பேரும்.

Story first published: Monday, May 25, 2020, 17:03 [IST]
Other articles published on May 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+