ஹர்திக் பாண்டியாவுடன் ரொமான்டிக் செல்பியை வெளியிட்ட நடாஷா

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிச் கடந்த வாரத்தில் நடுக்கடலில் நிச்சயதார்த்தம் செய்து அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டனர்.

சக வீரர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் இந்த நிச்சயதார்த்தம் குறித்து ஆச்சரியம் தெரிவித்ததுடன் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் தன்னுடைய வருங்கால கணவர் ஹர்திக் பாண்டியாவுடன் நடாஷா, ரொமான்டிக்காக புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கோலி உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து

கோலி உள்ளிட்ட வீரர்கள் வாழ்த்து

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த ஜனவரி 1ம் தேதி செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் நடுக்கடலில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

வாழ்த்துமழையில் நனைந்த ஜோடி

வாழ்த்துமழையில் நனைந்த ஜோடி

இந்த திடீர் நிகழ்வால் சக வீரர்கள், பாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் ஆச்சர்யமடைந்தனர். மேலும் இந்த ஜோடியை வாழ்த்து மழையில் நனையவிட்டனர்.

ஆச்சர்யம் அடைந்த கோலி

ஆச்சர்யம் அடைந்த கோலி

நிச்சயதார்த்தம் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்த்த கேப்டன் விராட் கோலி, தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதுடன் இந்த ஜோடிக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இன்ஸ்டாகிராமில் வெளியீடு

இன்ஸ்டாகிராமில் வெளியீடு

கடந்த ஒரு வாரமாக இந்த ஜோடி சமூக வலைதளங்களை கலக்கிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது தன்னுடைய வருங்கால கணவருடன் செல்பி எடுத்து நடாஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

டேக் செய்த நடாஷா

டேக் செய்த நடாஷா

தன்னுடைய இந்த செல்பியுடன் ஈத் ஷீரனின் போட்டோகிராப் பாடலையும் நடாஷா டேக் செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தில் ஹர்திக் வேறெங்கோ பார்த்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

நியூசிலாந்து ஏ அணியில் இடம்பிடிப்பு

நியூசிலாந்து ஏ அணியில் இடம்பிடிப்பு

முதுகுவலி காரணமாக கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத ஹர்திக் பாண்டியா தற்போது நடைபெற்று வரும் இலங்கை தொடர் மற்றும் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ள ஆஸ்திரேலிய தொடரிலும் பங்கேற்கவில்லை. மாறாக அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்திற்கு எதிரான ஏ அணியில் இடம்பிடித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Natasa Stankovic Shares Romantic Selfie With Hardik Pandya On Instagram
Story first published: Tuesday, January 7, 2020, 18:52 [IST]
Other articles published on Jan 7, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X