Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2019: பராக்… பராக்… பராக்…!! பெங்களூரை காப்பாற்ற வரும் நாதன் கூல்டர்னைல்

மும்பை:பெங்களூர் அணி தொடர்ந்து சொதப்பி வரும் வேளையில் அதன் நட்சத்திர வீரர் நேதன் கூல்டர்னைல் ஏப்ரல் 13ம் தேதி வந்து பெங்களூரு அணியில் இணைகிறார்.

தற்போதைய ஐபிஎல் சீசனில் கவலைக்கிடமான அணியாக காட்சியளிப்பது கோலி தலைமையிலான பெங்களூரு அணிதான். தொடர்ந்து தோல்விகள்... எக்கச்சக்கமான விமர்சனங்கள்.

அணியினை வெற்றி பாதைக்கு எப்படி அழைத்துச் செல்வது என்று தெரியாமல் கோலி புலம்பி வருகிறார். இதுதான் சாக்கு என்று ஆளாளுக்கு அவருக்கு ஆலோசனை என்ற பெயரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

சொதப்பலோ, சொதப்பல்

சொதப்பலோ, சொதப்பல்

பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட கோலி தலைமையிலான அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. கடைசியாக ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்றது.

தோல்வி தான் பரிசு

தோல்வி தான் பரிசு

தற்போது 2 வெற்றிகள், 1 தோல்வியுடன் உள்ள கொல்கத்தா அணியுடன் மோதுகிறது. இறுதியாக 2016ல் கொல்கத்தாவை பெங்களூரு வென்றிருந்தது அதன்பின்னர் சந்தித்த ஆட்டங்களில் தோல்விதான் பரிசாக கிடைத்துள்ளது.

பேட்டிங் கவலை

பேட்டிங் கவலை

பெங்களூரு தரப்பில் கேப்டன் கோலியின் பேட்டிங் கவலை தருவதாக உள்ளது. நான்கு ஆட்டங்களில் அவரது சராசரி 20க்கு கீழேதான் இருக்கிறது. டி வில்லியர்ஸ், பார்த்திவ் பட்டேல் ஆகியோரே பேட்டிங்கில் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

சாதனையை நோக்கி கோலி

சாதனையை நோக்கி கோலி

ரெய்னாவுக்கு அடுத்து 8000 டி 20 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க கோலிக்கு இன்னும் 17 ரன்கள் தேவைப்படுகிறது. பந்துவீச்சில் யுஜவேந்திர சாஹலை தவிர வேறு எவரும் சோபிக்கவில்லை. அதனால் அணியில் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிகிறது.

வருகிறார் நாதன் கூல்டர்னைல்

வருகிறார் நாதன் கூல்டர்னைல்

இந்நிலையில்.... அடுத்து வரக்கூடிய போட்டிகளில் சில மாற்றங்களை செய்ய பெங்களூரு அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, நட்சத்திர வீரர் ஏப்ரல் 13ம் தேதி வந்து பெங்களூரு அணியில் இணைகிறார். அதற்கு பிறகாவது மாற்றம் இருக்குமா என்று பார்ப்போம்.

Story first published: Friday, April 5, 2019, 15:23 [IST]
Other articles published on Apr 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+