Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத மெகா ரெக்கார்டு.. ஆஸ்திரேலிய வீரர் நாதன் லியோன் சாதனை

சிட்னி : ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மெகா சாதனை ஒன்றை படைத்து இருக்கிறார். அஸ்வின் நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனை அது. மேலும், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோரை விட ஒரு படி மேலே சென்று சாதித்து இருக்கிறார் நாதன் லியோன்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் பங்கேற்ற நாதன் லியோன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். ஒரே இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்கள் வீழ்த்துவது கிரிக்கெட்டில் 5 விக்கெட் ஹால் (5 Wicket Haul) எனப்படுகிறது.

Nathan Lyon got 5 wicket haul in 9 countries which Ashwin cannot beat in his career

அந்த வகையில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் வீழ்த்திய நாதன் லியோன் தனது 24வது 5 விக்கெட் ஹால்-ஐ எட்டினார். மேலும், நியூசிலாந்து மண்ணில் இதுவே அவரது முதல் 5 விக்கெட் ஹால் ஆகும். இதன் மூலம் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 9 அணிகளின் சொந்த மண்ணில் 5 விக்கெட் ஹால் சாதனை படைத்த மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் நாதன் லியோன்.

முன்னதாக முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஒன்பது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில் 5 விக்கெட் ஹால் சாதனையை செய்து இருந்தனர். ஆனால், அதிலும் கூட முத்தையா முரளிதரனால் ஆஸ்திரேலியாவிலும், ஷேன் வார்னேவால் வெஸ்ட் இண்டீஸ்-இலும் அதை செய்ய முடியவில்லை. அவர்கள் இருவரும் இந்த நாடுகளுக்கு பதிலாக ஜிம்பாப்வேவில் 5 விக்கெட் ஹால் சாதனை நிகழ்த்தி இருந்தனர்.

தற்போது ஜிம்பாப்வே நாட்டில் அதிக டெஸ்ட் தொடர்கள் நடைபெறாத நிலையில் அதைத் தவிர்த்து மற்ற முக்கிய நாடுகளில் எல்லாம் நாதன் லியோன் 5 விக்கெட் ஹால் சாதனை நிகழ்த்தி இருக்கிறார். அஸ்வினைப் பொறுத்தவரை அவர் இன்னும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என நான்கு முக்கிய நாடுகளில் அந்த சாதனையை செய்ததில்லை. அந்த வகையில் பார்த்தால் நாதன் லியோன் சாதனை மாபெரும் சாதனை ஆகும்.

நாதன் லியோன் 5 விக்கெட் ஹால் நிகழ்த்திய நாடுகள் மற்றும் எத்தனை முறை அதை செய்துள்ளார் என்ற பட்டியல் -

ஆஸ்திரேலியா - 9
இந்தியா - 5
வங்கதேசம் - 3
இலங்கை - 2
இங்கிலாந்து - 1
நியூசிலாந்து - 1
பாகிஸ்தான் - 1
தென்னாப்பிரிக்கா - 1
வெஸ்ட் இண்டீஸ் - 1

Story first published: Sunday, March 3, 2024, 18:46 [IST]
Other articles published on Mar 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+