Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடர்ச்சியாக 100 போட்டிகள்.. டெஸ்ட் வரலாற்றில் முதல் பவுலர்.. நேதன் லயன் படைக்கப்போகும் சாதனை!

லண்டன்: ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக 100 போட்டிகளில் விளையாடிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணியின் நேதன் லயன் படைக்கவுள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள இந்தப் போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளதால், இங்கிலாந்து அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

Nathan Lyon is the first bowler to play 100 consecutive Test Matches in the History

அதேபோல் இங்கிலாந்து அணியில் உள்ள ஒரே ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலியை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஜோஷ்வா டங்க் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியா அணி தரப்பில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இல்லை. அதேபோல் லார்ட்ஸ் மைதானத்தின் கடைசி நாளிலும் வேகப்பந்துவீச்சுக்கே சாதகமாக இருக்கும் என்பதால், 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கவும் வாய்ப்புள்ளது.

ஆனால் கட்டாந்தரையில் கூட ஸ்பின் செய்யும் வித்தையை அறிந்துள்ள நேதன் லயன் நிச்சயம் ஆஸி. அணியில் இருப்பார். அதேபோல் இவரை அட்டாக் செய்ய நினைத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை விட அதிக வாய்ப்புகள் உள்ளது. இன்றையப் போட்டியில் களமிறங்குவதன் மூலம் நேதன் லயன் தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைக்கவுள்ளார்.

இதுவரை 121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நேதன் லயன் 495 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 8வது வீரர் என்ற பெருமையை பெறுவார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அலெஸ்டர் குக், ஆலன் பார்டர், மார்க் வாக், சுனில் கவாஸ்கர், பிரெண்டன் மெக்கல்லம் என்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அந்த வரிசையில் நேதன் லயன் காயமின்றி 100 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Wednesday, June 28, 2023, 10:08 [IST]
Other articles published on Jun 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+