For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவருக்கு ஒரு நியாயம்.. எனக்கு ஒரு நியாயமா? செம நோஸ்கட்.. ஷேன் வார்னேவை விளாசிய ஆஸி. வீரர்!

சிட்னி : இளம் ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சனுக்கு அடுத்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்க வேண்டும், அவருக்கு வழி விட்டு நாதன் லியோன் ஓய்வு எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே கூறி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் நாதன் லியோன் தன் இடத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்றும், ஷேன் வார்னே தன் காலத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் கூறி வார்னேவுக்கு "நோஸ்கட்" கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலியா வெற்றி

நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் நடைபெற உள்ளது.

நாதன் லியோனுக்கு ஓய்வு?

நாதன் லியோனுக்கு ஓய்வு?

அந்த டெஸ்ட் போட்டியில் அணியின் முதன்மை சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோன் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், இதுவரை டெஸ்ட் அணியில் ஆடி இராத மிட்செல் ஸ்வெப்சனை அறிமுகம் செய்து வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார் ஷேன் வார்னே.

லியோன் சிறப்பான செயல்பாடு

லியோன் சிறப்பான செயல்பாடு

நாதன் லியோன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்க்ஸில் நியூசிலாந்து அணியின் 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார் லியோன்.

ஸ்வெப்சன் பார்ம்

ஸ்வெப்சன் பார்ம்

இளம் சுழற் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் சமீபத்தில் நடந்த ஆறு ஷெஃபீல்ட் ஷீல்ட் ஆட்டங்களில் 12 விக்கெட்களை வீழ்த்தி, சராசரியாக 26.58 வைத்து இருந்தார். தற்போது சிறப்பான பார்மில் இருக்கிறார்.

அறிமுகம் ஆகவில்லை

அறிமுகம் ஆகவில்லை

இதே ஸ்வெப்சன், 2017 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் வங்கதேச சுற்றுப்பயணங்களுக்கான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் உத்தேச அணியில் இடம் பெற்று இருந்தார், ஆனால், இன்னும் அவர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகவில்லை.

ஆடுகளம்

ஆடுகளம்

இந்த நிலையில், ஸ்வெப்சன் நியூசிலாந்து தொடரில், ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டார், சிட்னியில் ஆடுகளம் பெரும்பாலும் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு உதவும். அதனால், ஸ்வெப்சனை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட வைக்க வேண்டும் என்கிறார் வார்னே.

நோஸ்கட் தந்தார்

நோஸ்கட் தந்தார்

அவரது இந்த யோசனையை நாதன் லியோன் மறுத்துள்ளார். மேலும், வார்னே தன் காலத்தில் எப்போதாவது இதுபோல போட்டிகளில் ஓய்வெடுக்க விரும்பினாரா? அப்போது வார்னேவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று வந்த ஸ்டூவர்ட் மெக்கில்லுக்கு அணியில் ஆட வாய்ப்பு தந்தாரா?" என்றும் கேள்வி எழுப்பி அதிர வைத்துள்ளார்.

நான் ஓய்வெடுக்க மாட்டேன்

நான் ஓய்வெடுக்க மாட்டேன்

"நான் ஓய்வெடுக்க மாட்டேன். ஓய்வெடுக்க விரும்பும் எந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களையும் இதுவரை நான் சந்தித்ததில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது மிகவும் கடினம், ஆனால், பரிசு அளிக்கும் விஷயமும் இதுதான்.

வாய்ப்பு முக்கியம்

வாய்ப்பு முக்கியம்

"ஆஸ்திரேலியாவுக்காக கிரிக்கெட் விளையாட கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் மிகவும் முக்கியம். எனவே, மிட்ச் ஸ்டார்க், பாட் (கம்மின்ஸ்), பாட்டோ (ஜேம்ஸ் பாட்டின்சன்) ஆகியோர் எனக்கு ஓய்வு தேவை என்று சொல்வதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது." என்றார் லியோன்.

இருவரும் ஆட வாய்ப்பு

இருவரும் ஆட வாய்ப்பு

மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. கேப்டன் டிம் பெய்ன் மற்றும் தேர்வாளர்கள் சிட்னி ஆடுகளத்தைப் பார்த்த பிறகு இதுகுறித்து முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

3வது போட்டியில் என்ன நடக்கும்?

3வது போட்டியில் என்ன நடக்கும்?

ஆஸ்திரேலியா அந்த முடிவை எடுத்தால், அவர்கள் நிச்சயமாக வேகப் பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் பாட்டின்சன் ஆகியோரை தக்க வைத்துக் கொள்வார்கள். மிடில் ஆர்டரில் ஆடும் மேத்யூ வேட்-ஐ நீக்கி விட்டு, ஸ்வெப்சன் மற்றும் நாதன் லியோன் இருவரும் அணியில் ஆட வைப்பார்கள்.

Story first published: Monday, December 30, 2019, 17:18 [IST]
Other articles published on Dec 30, 2019
English summary
Nathan Lyon slams Shane Warne after he asked him to rest in Sydney test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+