இந்தியாவுக்கு எமனாக உள்ள ஒரே ஒரு வீரர்..கோலி, புஜாராவுக்கு காத்திருக்கும் கண்டம்.. அப்படி என்ன ஆனது?
நாக்பூர்: பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரே ஒரு வீரர் இந்திய அணிக்கு எமனாக வந்து நின்றுள்ளார். அவரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் கடும் பயிற்சியில் சிக்கியுள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் பிப்ரவரி 9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ரோகித் சர்மா பெரிய கண்டத்தில் இருந்து தப்பிக்க முடியும். ஏனென்றால் அவரின் கேப்டன்சி எதிர்காலமே இந்த தொடரை வைத்துதான் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா??

ஆஸ்திரேலிய தொடர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடனான 4 டெஸ்ட் போட்டிகளை 3 - 1 அல்லது 2 - 0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும். 2013ம் ஆண்டுக்கு பின் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் உள்ள இந்திய அணி இந்த முறையாவது ஐசிசி கோப்பையை வெல்ல முனைப்பு காட்டுகிறது. அது ரோகித் சர்மாவின் கேப்டன்சியில் தான் உள்ளது.

அச்சுறுத்தும் நாதன் லியோன்
இந்நிலையில் இந்தியாவுக்கு ஒரே ஒரு வீரர் தடையாக இருக்கிறார். அது ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் தான். இந்தியாவுக்கு எதிராக இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லியோன் 94 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 34 ரன்களுக்கு ஒருமுறை விக்கெட் எடுத்துவிடுகிறார். அதுவும் இந்திய மண்ணில் இன்னும் சிறப்பாக உள்ளது.

என்ன ஸ்பெஷல்
இந்திய மண்ணில் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள நாதன் லியோன் 34 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அவரின் எகானமி ரேட்டும் தற்போது 2.88 ரன்களாக குறைந்துள்ளது. சராசரியாக 25.26 ரன்களுக்கு ஒருமுறை விக்கெட்டை எடுத்துவிடுகிறார். குறிப்பாக விராட் கோலி மற்றும் சட்டீஸ்வர் புஜாரா ஆகியோர் இவருக்கு எதிராக திணறுகின்றனர்.

கோலிக்கு ஆபத்து
இந்திய மண்ணில் விளையாடிய 7 போட்டிகளில் நாதன் லியோனுக்கு எதிராக 4 முறை விராட் கோலி அவுட்டாகியுள்ளார். அவரால் வெறும் 93 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்துள்ளது. இதே போல சட்டீஸ்வர் புஜாரா நாதனுக்கு எதிராக 176 ரன்களை அடித்துள்ள போதும் 5 முறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். இதனால் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் மிகவும் உஷாராக விளையாட வேண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications