Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு விக்கெட்டுக்காக ஒரு வருடம் காத்திருந்த ஆஸி. வீரர் லயான்..!!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் லயான் தனது 400வது டெஸ்ட் விக்கெட்டை இன்று வீழ்த்தினார்.

Recommended Video

Nathan Lyon takes 400th Test wicket | Ashes Brisbane Test | AUS vs ENG | OneIndia Tamil

ஆனால் இந்த 400வது விக்கெட்டை எடுக்க எவ்வளவு நாள் காத்திருந்தார் தெரியுமா?

ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னேவிற்கு பிறகு அந்த அணிக்கு கிடைத்த சிறந்த சுழற்பந்துவீச்சாளர் தான் லயான்.

கிண்டல்

கிண்டல்

லயான் அடிலெயட் ஆடுகளத்தை பராமரிக்கும் ஊழியராக சேர்ந்து பின்னர் கிரிக்கெட் விளையாடி ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்து தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார்.34 வயதான லயானுக்கு கடந்த ஓர் ஆண்டாகவே கிரிக்கெட் வாழ்க்கை மோசமாகவே அமைந்தது. இதனால் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்று சுருக்கி கோட் என்று அழைத்த ரசிகர்கள், லயானை கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.

9 விக்கெட்

9 விக்கெட்

லயான் தனது 390வது டெஸ்ட் விக்கெட்டை ஜனவரி 2020ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சிட்னியில் எடுத்தார். அடுத்த 9 விக்கெட்டுகளை அவர் வீழ்த்த சுமார் 220 ஓவர் வீசியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது செயல்பாட்டை தற்போது காணலாம் (1/68, 3/72,0/5,0/87,/2/114,1/65,2/85). அதாவது அந்த தொடரில் அவர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அந்த ஒரு விக்கெட்

அந்த ஒரு விக்கெட்

இதில் ஒரு நகைச்சுவை என்னவென்றால் ஆஸ்திரேலிய தொடரின் முடிவில் அஸ்வின் 377 விக்கெட்டுகளை தான் எடுத்திருந்தார்.ஆனால் லயான் அப்போது 399 விக்கெட்டுகள் என இருந்தார். ஆனால் தற்போது அஸ்வின் 427 விக்கெட்டுகள் மேல் சென்றுவிட்டார். ஆனால் லயான் தற்போது தான் 400வது விக்கெட்டை கடந்துள்ளார். அதாவது அஸ்வின் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய நேரத்தில் லயான் இப்போது தான் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

403 விக்கெட்

403 விக்கெட்

இதனால் ரசிகர்கள் லயானை கிண்டல் செய்ய தொடங்கினர்.கோலி 71வது சதம் அடிக்கும் போது தான் லயான் 400வது விக்கெட்டை எடுப்பார் என்று விமர்சனம் செய்தனர். இதனால் தனது இடத்திற்கு ஆபத்து வந்ததை உணர்ந்த லயான், ஒரு விக்கெட்டுக்காக ஒரு ஆண்டு காத்திருந்த நிலையில், தற்போது 2 மணி நேரத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 403 விக்கெட்டுக்கு சென்றுவிட்டார்.

Story first published: Saturday, December 11, 2021, 13:13 [IST]
Other articles published on Dec 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+