இது நியாயமே இல்லை.. எதிர்பார்க்காத இடத்தில் இருந்து குவிந்த ஆதரவு.. அஸ்வினுக்கு செம சப்போர்ட்!
அகமதாபாத்: அகமதாபாத் பிட்ச் சர்ச்சையான நிலையில் தமிழக வீரர் அஸ்வினுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய வீரர் நாதன் லைன் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு அகமதாபாத் பிட்ச்தான் காரணம் என்று சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த பிட்ச் மோசமாக இருந்தது. இதனால்தான் இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது என்று புகார் வைக்கப்பட்டு வருகிறது.

அஸ்வின்
இந்த பிட்ச் குறித்து தற்போது எழுந்து வரும் புகார்களுக்கு அஸ்வின் முறையாக பதிலடி கொடுத்துள்ளார். அதில், அகமதாபாத் பிட்ச் மீது இங்கிலாந்து அணிக்கு கோபம் இருப்பதாக தெரியவில்லை. அணிக்கு வெளியில்தான் பிட்ச் மீது பலர் புகார் வைக்கிறார்கள். நாங்கள் எப்போதும் இது போல பிட்ச் மீது புகார் வைத்தது இல்லை.

பதிலடி
எந்த பிட்ச் எங்களுக்கு வழங்கப்படுகிறதோ அதில் நாங்கள் விளையாடுவோம், என்று அஸ்வின் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் அஸ்வினின் கருத்துக்கு தற்போது ஆஸ்திரேலிய பவுலர் நாதன் லைன் ஆதரவு தெரிவித்துள்ளார். அஸ்வினுக்கும், இவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் அஸ்வினுக்கு ஆதரவாக நாதன் லைன் பேசி உள்ளார்.

நாதன் லைன்
நாதன் லைன் தெரிவித்துள்ள கருத்தில், அகமதாபாத் பிட்சை ஏன் விமர்சனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி இருந்தால் அதை என் விமர்சனம் செய்கிறார்கள். அதை ஏன் தவறான பிட்ச் என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

பவுலிங்
பாஸ்ட் பவுலிங் பிட்சை யாரும் இப்படி சொல்வது இல்லை. பேட்டிங் பிட்சை மோசமான பிட்ச் என்று யாரும் சொல்வது இல்லை. அப்படி இருக்கும் போது ஸ்பின் பிட்சை இப்படி விமர்சனம் செய்வது தவறு. இதில் அஸ்வின் கூறிய கருத்துக்கள் மிகவும் சரியானது என்று நாதன் லைன் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications