Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

''சச்சின்.. சச்சின்..''- இந்தியாவின் அத்தனை கண்களும் வாங்கடேவை நோக்கி... !

மும்பை: இந்தியா முழுக்க சச்சின் ஜூரம் விறுவிறுப்பாகியுள்ளது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இன்று தனது கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடுகிறார்.

மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டிதான் சச்சினின் கடைசி மற்றும் 200வது டெஸ்ட் போட்டியாகும்.

இதையடுத்து சச்சின் பக்தர்கள் அத்தனை பேரும் கண் கலங்க, மனம் நடுங்க, பெரும் சோகத்துடனும், அதேசமயம், கடைசிப் போட்டியில் சச்சின் பெரும் சாதனை நிகழ்த்தி பெருமையுடன் விடை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் மும்பை நோக்கி தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர்.

கிரிக்கெட் கடவுள்

கிரிக்கெட் கடவுள்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை சச்சின் ஒரு சாதாரண வீரர் அல்ல. மாவீரர் கூட அல்ல.. அதற்கும் மேலாக கடவுளாக பார்க்கின்றனர் ரசிகர்கள்.

கடவுளின் கடைசி கிரிக்கெட்

கடவுளின் கடைசி கிரிக்கெட்

அப்படிப்பட்ட கிரிக்கெட் கடவுள் இன்று தொடங்கும் போட்டியுடன் விடைபெறுகிறார் என்பதை சச்சின் ரசிகர்களால் நம்பவே முடியவில்லை. அத்தனை பேருமே எதையோ பறி கொடுத்தவர்கள் போல பெரும் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

ஸ்டைலாக விடை பெறு தலைவா

ஸ்டைலாக விடை பெறு தலைவா

அதேசமயம் தங்களது ஸ்டார் வீரர், தனது கடைசிப் போட்டியில் ஸ்டைலாக விடை பெற வேண்டும். ரன்களைக் குவிக்க வேண்டும். புதிய சாதனை எதையாவது படைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்களிடம் ஏகமாகவே உள்ளது.

அடுத்த 5 நாட்களும் திருவிழாதான்

அடுத்த 5 நாட்களும் திருவிழாதான்

இன்று தொடங்கி 5 நாட்களும் சச்சின் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரு திருவிழா போல பாவிக்கின்றனர். நாடு முழுவதும் மும்பை வாங்கடே மைதானத்தின் மீதுதான் கண்களைக் குவித்து வைத்திருக்கப் போகிறது.

மும்பை மக்கள் பெரும் ஆர்வம்

மும்பை மக்கள் பெரும் ஆர்வம்

அதேசமயம், சச்சினின் மும்பையிலும் உற்சாக வெள்ளமும், எதிர்பார்ப்பும் கரைபுரண்டோடி வருகிறது. மும்பை முழுவதும் நாளை வாங்கடே மைதானத்தின் பக்கம்தான் இடம் பெயர்ந்து உட்காரப் போகிறதோ என்ற அளவுக்கு அங்கு சச்சின் புராணமாக இருக்கிறது.

உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு

உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு

இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவிலும் சச்சினின் கடைசி ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக கிரிக்கெட் ஆடும் நாடுகளில் ரசிகர்கள் சச்சின் தனது கடைசிப் போட்டியில் எப்படி ஆடப் போகிறார் என்ற ஆர்வத்துடன் உள்ளனராம்.

நேரில் வரும் சச்சின் குடும்பம்

நேரில் வரும் சச்சின் குடும்பம்

சச்சின் ஆடப் போகும் கடைசிப் போட்டியைப் பார்க்க அவரது தாயார் ரஜினி டெண்டுல்கர் வாங்கடே மைதானத்திற்கு நேரில் வருகிறார். அவருக்காக சிறப்பு ஏற்பாடுகளை மும்பை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. சச்சினின் மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜூன், சகோதரர்கள் எனஒட்டுமொத்த குடும்பத்தினரும் நேரில் வந்து போட்டியைப் பார்க்கவுள்ளனர்.

பெரும் வெற்றிடம்

பெரும் வெற்றிடம்

சச்சினின் ஓய்வு இந்திய கிரிக்கெட்டில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் சோகத்துடன் கூறுகின்றனர். அவரது இடத்தை நிரப்புவது மிகக் கடினம். நீண்ட காலத்திற்கு சச்சினின் இழப்பை நாம் அனுபவிக்கப் போகிறோம் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இனிமேல் எப்படிப் பார்ப்பது சச்சின் ஸ்டைலை...

இனிமேல் எப்படிப் பார்ப்பது சச்சின் ஸ்டைலை...

சச்சின் என்றாலே அவரது கவர் டிரைவ்கள், ஸ்டிரெய்ட் டிரைவ்கள், அப்பர் கட், ஸ்கொயர் கட் ஆகியவைதான் நினைவுக்கு வரும். அந்த ஸ்டைலே தனியாக இருக்கும். அதையெல்லாம் இனி எப்போது பார்ப்போம் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

ஒபாமாவின் பிரியாவிடை வாழ்த்து

ஒபாமாவின் பிரியாவிடை வாழ்த்து

சச்சின் புகழ் உலகம் முழுக்க வியாபித்துக் கிடக்கிறது என்பதற்கான சாட்சியே, அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆகியோர் தெரிவித்துள்ள பிரியாவிடை வாழ்த்துக்களே சொல்லும்.

கம் ஆன்.. சச்சின்.. கலக்குங்க

கம் ஆன்.. சச்சின்.. கலக்குங்க

ரசிகர்களோடு நாமும் சேர்ந்து சச்சின் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி இந்திய அணிக்கு வெற்றியையும், தனக்கு புகழையும் தேடித் தரும் வகையில் விளையாடி ஜில்லென்று விடைபெற வாழ்த்துவோம்...

Story first published: Thursday, November 14, 2013, 8:28 [IST]
Other articles published on Nov 14, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+