திருமண நாளை ஸ்பெஷலாக கொண்டாடிய நடராஜன்.. மனைவி கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ் - முழு விவரம்!
சேலம்: தமிழக வீரர் நடராஜனின் திருமண தினத்தையொட்டி அவரது மனைவி பவித்ரா தெரிவித்துள்ள காதல் கருத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சேலம் சின்னப்பம்பட்டியில் என்றவுடன் தற்போது அனைவரின் நினைவுக்கும் வருபவர் டி.நடராஜன். இவருக்கு ரசிகர்களிடம் இருந்து இன்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஐபிஎல் தொடரி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி பின்னர் இந்திய அனியில் இடம் பிடித்து அசத்தினார்.

அறிமுகம்
கடந்த ஆண்டு இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 3 வடிவ கிரிக்கெட் தொடர்களில் அறிமுகமான 'யார்க்கர் கிங்' நடராஜன். இதன் பின்னர் இவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் இங்கிலாந்து தொடர், ஐபிஎல் எதிலும் கலந்துக்கொள்ளாமல் ஓய்வு எடுத்து வருகிறார்.

3வது திருமண நாள்
டி. நடராஜன் கடந்த 2018ஆம் ஆண்டு தனது காதலில் பவித்ராவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நேற்று மூன்றாவது ஆண்டு திருமண நாள்.
இந்நிலையில் திருமண நாளை கொண்டாடும் வகையில் நடராஜனின் மனைவி பவித்ரா இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் நடராஜனை பாராட்டியுள்ளார்.

வாழ்த்து
அந்த பதிவில், நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிறோம். உங்களது புன்னகை இன்னும் என்னை உருகவைக்கிறது. என் வாழ்க்கையின் காதலுக்குத் திருமண நாள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். பவித்ராவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பட்டம்
இதுமட்டுமல்லாமல் மற்றொரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்துள்ளது. நடராஜனுக்கு 'நட்டு', யார்க்கர் கிங், யார்க்கர் நாயகன் என ரசிகர்கள் பல பெயர்களை வைத்து புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் நடராஜனின் மனைவி, அஅவருக்கு 'புன்னகை மன்னன்' என்ற பட்டத்தை வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications