Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தலையை நோக்கி வேகமாக எறிந்த சைனி.. கோபம் அடைந்த ஸ்டார்க்.. போட்டிக்கு இடையே மோதல்.. பரபர சம்பவம்

சிட்னி: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சைனி - ஸ்டார்க் இடையே ஏற்பட்ட மோதல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்று டெஸ்ட் போட்டி முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்மித் ரன் அவுட் ஆனார். ஜடேஜா ரன் அவுட் உட்பட 5 விக்கெட் எடுத்தார்.

எப்படி

எப்படி

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சைனி - ஸ்டார்க் இடையே ஏற்படாத மோதல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய பவுலர் மிட்சல் ஸ்டார்க் பேட்டிங் செய்த போது சைனி வரிசையாக பவுன்சர் பந்துகளை வீசினார். இதில் ஒரு பந்து பிட்ச் ஆகாமல் புல் டாஸ் பந்தாக சென்றது. இதை எதிர்கொண்ட ஸ்டார்க் கோபம் அடைந்தார்.

தலையில் காயம்

தலையில் காயம்

தலையில் அடிப்பது போல வந்த புல் டாஸ் பந்தில் இருந்து கீழே குனிந்து ஸ்டார்க் தப்பித்தார். இதற்கு பின் கோபம் அடைந்த ஸ்டார்க் சைனியை பார்த்து முறைத்தார். இதற்கு முன்பே சைனி இதேபோல் புல் டாஸ் பந்துகளை போட்டு பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி உள்ளார். இதனால் சைனியை ஸ்டார்க் கோபமாக முறைத்து பார்த்தார்.

கோபம்

கோபம்

ஸ்டார்க் கோபம் அடைந்ததை பார்த்த சைனி அவரிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் ஸ்டார்க் விட்டுக்கொடுப்பதாக இல்லை. அதே ஓவரில் சைனி பந்தில் ஸ்டார்க் சிக்ஸ் அடித்தார். அதே ஓவரில் மீண்டும் சிக்ஸ் அடிக்க ஸ்டார்க் முயன்றார். அந்த ஓவர் முழுக்க அடித்து வெளுக்கும் திட்டத்தில்தான் ஸ்டார்க் இருந்தார்.

சைனி

சைனி

ஆனால் சைனியின் அதே ஓவரில் ஸ்டார்க் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவுட்டாகி செல்லும் போது ஸ்டார்க் சைனியை முறைத்தபடியே சென்றார். இவர்களுக்கு இடையில் இன்று களத்தில் ஏற்பட்ட உரசல் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Story first published: Friday, January 8, 2021, 11:02 [IST]
Other articles published on Jan 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+