இந்த ஓநாய் இருக்கே.. அது ரொம்ப ஸ்பெஷல்..! அறிமுக போட்டியில் அசத்திய இந்திய வீரர் ஓபன் டாக்
புளோரிடா: ஓநாய் எந்த சர்க்கசிலும் சாகசம் செய்யாதவை, தனித்துவம் கொண்டவை என்று இளம்வீரர் நவ்தீவ் சைனி கூறியுள்ளார்.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டி 20 போட்டி புளோரிடாவில் நடந்தது. போட்டியில் முதல் பவுலிங் செய்த இந்திய அணி 95 ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை மடக்கியது.
அதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. 4 ஓவர்களை வீசிய சைனி 17 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப் பட்டார்.

முதல் போட்டியில் அசத்தல்
சர்வதேச போட்டியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே அவர் ஆட்ட நாயகனாக சாதித்தார் இளம்வீரர் சைனி. அதனால் அவர் அதிக கவனம் பெற்றார். அத்துடன் சைனி தனது இடது கையில் ஓநாய் டாட்டூ ஒன்றை போட்டிருந்தார்.

என்ன காரணம்?
அந்த டாட்டூவிற்கு அர்த்தம் என்ன என்பது தொடர்பாக சைனி விளக்கம் அளித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் சைனியை பேட்டி எடுத்தார்.
சற்று அழுத்தம்
அப்போது சைனி கூறியதாவது: முதல் போட்டி என்பதால் சற்று அழுத்தமாக உணர்ந்தேன். இருந்தாலும் விக்கெட்டுகள் சாய்ந்தன. பொலார்டு விக்கெட் நான் எதிர்பாராதது என்றார்.

ஓநாய் படம் ஏன்?
கையில் இருக்கும் டாட்டூ குறித்து பேசிய அவர், எனது அண்ணன் சிறுவயது முதலே ஓநாய்கள் படம் அதிகம் பார்ப்பார். அவரது தூண்டுதலால் இந்த ஓநாய் டாட்டூவை வரைந்திருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதேசமயம் ஓநாய் எந்த சர்க்கசிலும் சாகசம் செய்யாதவை. தனித்துவம் கொண்டவை என்றார்.


Click it and Unblock the Notifications