Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை எல்லாம் ஏன் டீம்ல எடுத்தீங்க.. எவ்வளவு அட்வைஸ் கொடுத்தும் கேட்கவில்லை.. கோபப்படுத்திய வீரர்!

சிட்னி: இந்திய அணியின் இளம் பவுலர் சைனி நேற்றும் இன்றும் பவுலிங் செய்த விதம் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்று டெஸ்ட் போட்டி முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முதல்நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்திய அணியின் சிறப்பான பவுலிங், ஸ்மித்தின் அதிரடி பேட்டிங் என்று தொடக்கத்தில் இருந்து இன்றைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

எப்படி

எப்படி

இந்திய அணிக்காக இன்று பவுலிங் செய்த ஜடேஜா, சிராஜ், பும்ரா என்று எல்லோரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். அஸ்வினுக்கு ஏனோ பெரிய அளவில் இன்று ஓவர் கொடுக்கப்படவில்லை. ஆனால் இன்று இந்திய அணிக்காகக் பவுலிங் செய்த இளம் வீரர் சைனி தனது மோசமான ஆட்டத்தால் விமர்சனத்திற்கு உள்ளானார்.

விமர்சனம்

விமர்சனம்

நேற்று பவுலிங் செய்தே போதே ஒரு ஓவருக்கு சைனி 7 ரன்கள் வரை கொடுத்தார். டி 20 போட்டிகளில் ஒரு ஓவருக்கு சைனி 10 ரன்கள் கூட கொடுப்பார். டெஸ்ட் போட்டியிலும் அதேபோல் ரன்களை வாரி வழங்கினார்.

பவுன்சர்

பவுன்சர்

அதி வேகத்தில் பவுன்சர் போடுவதுதான் சைனியின் ஸ்பெஷாலிட்டி. ஆனால் இரண்டு நாள் போட்டியில் இவர் மொத்தமாக 8 பவுன்சர்தான் வீசி இருப்பார். தன்னுடைய ஸ்டிராங் எதுவோ அதை கூட சைனி சரியாக பயன்படுத்தவில்லை. பவுன்சர் போடுகிறேன் என்று சில நோ பால்களையும் சைனி வீசினார்.

ஏன் பாஸ் இப்படி

ஏன் பாஸ் இப்படி

இவர் பவுலிங் செய்த போதெல்லாம் ஸ்மித் அதை பயன்படுத்திக் கொண்டு பவுண்டரிகளை விளாசினார். ஸ்டார்க் போன்ற பவுலர்கள் கூட சைனி ஓவரில் சிக்ஸ் அடித்தனர். இதுவரை 13 ஓவர் வீசி உள்ள சைனி 65 ரன்கள் கொடுத்துள்ளார். ஸ்டார்க் விக்கெட் உட்பட 2 விக்கெட்டுகளை சைனி எடுத்தார்.

மொத்தம்

மொத்தம்

மற்ற பவுலர்களின் பந்துகளில் திணறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சைனியை அடித்து வெளுத்து பார்மிற்கு திரும்பினார்கள். ஸ்மித் போன்றவர்கள் பார்மிற்கு திரும்பவே சைனிதான் இன்று முக்கிய காரணமாக இருந்தார். சைனி இன்று மோசமாக பவுலிங் செய்த போது சக வீரர்கள் பலர் அவருக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கினார்கள்.

அறிவுரை

அறிவுரை

சிராஜ் தொடங்கி ரோஹித் சர்மா வரை பலர் சைனிக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கினார்கள். ஆனால் சைனி அறிவுரையை எல்லாம் கேட்டுக்கொண்டு மீண்டும் மோசமாக பவுலிங் செய்தார். சரியான லைனில் கூட பவுலிங் செய்ய முடியாத சைனியை இந்திய அணியில் எடுத்தது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Story first published: Friday, January 8, 2021, 9:37 [IST]
Other articles published on Jan 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+