நடராஜனுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணியில் இடம்பிடித்த நவ்தீப் சைனி.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்.. போச்சு
சிட்னி: இந்திய டெஸ்ட் அணியில் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் நவ்தீப் சைனி இடம்பிடித்து இருக்கிறார்.
Recommended Video

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆட போகும் இந்திய அணி வீரர்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டு உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை நடக்க உள்ளது.
இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. தற்போது இரண்டு அணிகளும் கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறது.

எப்படி
இந்திய அணியில் மயங்க் அகர்வால் நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா அணிக்குள் வந்துள்ளார். அதன்படி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், ரஹானே, புஜாரா, ஜடேஜா, பண்ட், விஹாரி, பும்ரா, சிராஜ், அஸ்வின், சைனி ஆகியோர் ஆட உள்ளனர்.

சைனி
இந்திய டெஸ்ட் அணியில் உமேஷ் யாதவிற்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் நவ்தீப் சைனி இடம்பிடித்து இருக்கிறார். அதேபோல் ஷரத்துல் தாகூருக்கும் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது.

வாய்ப்பு
ஆனால் இவர்கள் இருவருக்கும் பதிலாக நவ்தீப் சைனி டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆகிறார். இவர்தான் முதலில் டெஸ்ட் அணியில் நேரடியாக இடம்பெற்ற வீரர். தாக்கூர், நடராஜன் இருவரும் காயம் அடைந்த வீரர்களுக்கு மாற்றாக உள்ளே வந்தனர். இதன் காரணமாகவே நவ்தீப் சைனிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

வேகம்
இவர் 145 கிமீ வேகத்தில் பந்து வீச கூடியவர். இதன் காரணமாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகமாக இவர் பவுன்சர் பந்துகளை வீசுவார். இதுவும் இவரின் தேர்வுக்கு முக்கிய காரணம் ஆகும்.

நடராஜன்
வலைப்பயிற்சியில் நடராஜன் நன்றாக பந்து வீசி வந்தார். இதனால் நடராஜன் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் தர போட்டிகளில் இருக்கும் அனுபவம் காரணமாக நவ்தீப் சைனி வாய்ப்பு பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications