Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.க்கு உதவிய "சைனி" பெயர்ச்சி.. ரன்களை வாரி வழங்கிய வீரர்.. இதுக்கு நடராஜனை எடுத்து இருக்கலாம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் நவ்தீப் சைனி ரன்களை வாரி வழங்கி வருகிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அவ்வப்போது மழை குறுக்கிடுவதால் மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக மாறியுள்ளது.

இதனால் தொடக்கத்தில் திணறி வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தற்போது நிலையாக ஆட தொடங்கி உள்ளனர். அதிலும் வில் புக்கோவஸ்கி, மார்னஸ் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளனர்.

எப்படி

எப்படி

இந்த டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவிற்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உமேஷ் யாதவ் காயம் அடைந்த நிலையில் சைனி இன்று களமிறக்கப்பட்டார். இதுதான் அவருக்கு முதல் போட்டியாகும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இன்றி சைனி பவுலிங் செய்த விதம் மிகவும் மோசமாக இருந்தது. முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரி கொடுத்துதான் இவர் ஓவரை தொடங்கினார். அந்த ஓவரில் 9 ரன்கள் கொடுத்த சைனி அடுத்தடுத்த ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினார்.

எப்படி

எப்படி

சில பந்துகளை இவர் நல்ல லென்தில் வீசினார். அதேபோல் சில பந்துகளை 145 கிமீ வேகத்தில் வீசினார். ஆனாலும் ஆஸி பேட்ஸ்மேன்கள் இவரின் பந்துகளை அடித்து பறக்கவிட்டனர். ஒவ்வொரு ஓவருக்கும் கிட்டத்தட்ட 7 ரன்களை சைனி வழங்கினார்.

ஏன் பாஸ் இப்படி

ஏன் பாஸ் இப்படி

இது டெஸ்ட் போட்டி என்று தெரியாமல் டி 20 போட்டி போல சைனி ரன்களை வாரி வழங்கியது பெரிய அளவில் அதிர்ச்சியாக இருந்தது. இடையில் புக்கோவஸ்கி விக்கெட்டை சைனி எடுத்து இருந்தாலும் இவர் ரன்களை வாரி வழங்குவது ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக மாறியது.

நடராஜன்

நடராஜன்

இந்திய அணியில் நடராஜன் அல்லது ஹரத்துல் தாக்கூரை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டது . ஆனால் சைனியை நம்பி அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த வாய்ப்பை சைனி சரியாக பயன்படுத்தவில்லை .

Story first published: Thursday, January 7, 2021, 13:03 [IST]
Other articles published on Jan 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+