இது பயிற்சியா இல்லை.. ஐபிஎல் பைனலா? பெரும் கூட்டமாக வந்து மெர்சல் காட்டிய சிஎஸ்கே ரசிகர்கள்!
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்கள் பயிற்சியை துவங்கி உள்ளனர்.
2019 ஐபிஎல் தொடர் வரும் மே 23 முதல் துவங்க உள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர், மோதும் போட்டி நடைபெற உள்ளது.

ரசிகர் கூட்டம்
இந்த சீசனுக்கான பயிற்சியில் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் பலரும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இவர்களை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் எண்ணிக்கை 12,000மாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு எப்படி?
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி தடையில் இருந்து மீண்டு வந்த போது, பயற்சியைக் காண சுமார் 10,000 ரசிகர்கள் வரை வந்தனர். அப்போது ஐபிஎல் அரங்கில் அது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. தற்போது அதை விட அதிக கூட்டம் பயிற்சியை காண வந்துள்ளது.
தோனிக்கு கிடைத்த வரவேற்பு
மேலும், இந்த பெருங் கூட்டத்துக்கு மத்தியில் முன்னணி வீரர்கள் நடந்து வந்த போது, ரசிகர்கள் கூக்குரல் எழுப்பி மகிழ்ந்தனர். குறிப்பாக, தல தோனி பயிற்சிக்காக மைதானத்தின் உள்ளே நுழைந்த போது எழுந்த வரவேற்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
சின்ன தல ரெய்னா
அதே போல, சின்ன தல என சிஎஸ்கே ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா உள்ளே வந்த போதும், ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு அளித்தனர்.


Click it and Unblock the Notifications