Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

NED vs NAM: ஆல் - ரவுண்டர் பாஸ் டி லீட்.. 72 ரன், 2 விக்கெட்.. நமீபியாவை பந்தாடிய நெதர்லாந்து வீரர்

டெல்லி: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நமீபியா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆல்-ரவுண்டர் பாஸ் டி லீட் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கியதே நெதர்லாந்தின் இந்த அபார வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. டெல்லியில் நடைபெற்ற குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

நமீபியா போராட்டம்

முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. இருப்பினும் ஜான் பிரைலின்க் மற்றும் ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டது. பிரைலின்க் 30 ரன்களும், லோஃப்டி-ஈடன் 38 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர்.

NED vs NAM Netherlands Clinches First Victory in T20 World Cup 2026 as Bas de Leede beat Namibia

இடைப்பட்ட ஓவர்களில் நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (18) மற்றும் ஜே.ஜே. ஸ்மிட் (22) ஆகியோர் கடைசி நேரத்தில் அதிரடி காட்டியதால், நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. நெதர்லாந்து தரப்பில் பாஸ் டி லீட் மற்றும் லோகன் வான் பீக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பாஸ் டி லீட் அதிரடி

157 ரன்கள் என்ற சவாலான இலக்கைத் துரத்திய நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் லெவிட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அவர் 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்பட 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பவர் பிளே ஓவர்களில் நெதர்லாந்து அணி 50 ரன்களைக் கடந்தாலும், 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது.

ஆனால், மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாஸ் டி லீட் மற்றும் காலின் அக்கர்மேன் ஜோடி ஆட்டத்தை நெதர்லாந்து பக்கம் திருப்பியது. இருவரும் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அக்கர்மேன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் வெற்றி

மறுமுனையில் தூணாக நின்ற பாஸ் டி லீட், நமீபியா பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார். கடினமான ஆடுகளத்திலும் மிக எளிதாக ரன் குவித்த அவர், 48 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் நெதர்லாந்து அணி 18 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்தத் தொடரில் நெதர்லாந்து பெறும் முதல் வெற்றியாகும். பந்துவீச்சில் 2 விக்கெட் மற்றும் பேட்டிங்கில் 72 ரன்கள் குவித்த பாஸ் டி லீட் ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

Story first published: Tuesday, February 10, 2026, 16:41 [IST]
Other articles published on Feb 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+