Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேர்வுக் குழு கலைப்பு.. குற்றச்சாட்டுகளை மடைமாற்றும் செயலா? பிசிசிஐ செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?

சென்னை: டி20 உலகக்கோப்பை தோல்வி எதிரொலியாக தேர்வு குழு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. இதனால் இந்திய அணியில் உள்ள வீரர்களின் தேர்வு குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தோல்வி எதிரொலியை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வு குழுவில் உள்ள அனைவரையும் நீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

இதுபல்வேறு கேள்விகளை ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது. குறிப்பாக டி20 உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் வீரர்களின் தேர்வு மட்டுமல்லாமல், பிசிசிஐ நிர்வாகம், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் தரம், ஐபிஎல் தொடர் அட்டவணை, தொடர்ந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது என்று ரசிகர்களும், விமர்சகர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தனர்.

சீனியர் வீரர்களுக்கு ஓய்வு

சீனியர் வீரர்களுக்கு ஓய்வு

அதுமட்டுமல்லாமல் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோரை அணியில் இருந்து நீக்கிவிட்டு இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்றும், டி20 கேப்டன்சியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்களிடையே பேச்சு எழுந்தது. அதேபோல் இந்திய மைதானத்தில் உள்ள சிக்சர்களின் அளவினை கூடுதலாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.

 மடைமாற்றம் செயல்

மடைமாற்றம் செயல்

இந்த நிலையில் தான் சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வு குழுவை பிசிசிஐ நீக்கியுள்ளது. இதன் மூலம் 2019ம் ஆண்டு உலகக்கோப்பைத் தோல்வியையடுத்து சஞ்சய் பங்கரை நீக்கியது போல், இதுவும் கண்துடைப்பு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிசிசிஐ மீதான குற்றச்சாட்டுகளை மடைமாற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

பிரத்யேக தேர்வுக் குழு

பிரத்யேக தேர்வுக் குழு

இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20 வகை கிரிக்கெட் போட்டிகளுக்கு என பிரத்யேக தேர்வுக் குழுவையும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

வாய்ப்புகள்

வாய்ப்புகள்

அதுமட்டுமல்லாமல் உள்ளூர் கிரிக்கெட்டில் கீழ்நிலையில் ஆடும் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற பேச்சுகளும் அதிகமாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் தொடக்க வீரர்களாக களமிறங்கி ரன்களை சேர்ப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதோடு, கீழ்நிலையில் பிரஷர் சூழலில் ரன்கள் சேர்க்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Saturday, November 19, 2022, 12:14 [IST]
Other articles published on Nov 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+