Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒவ்வொரு வீரரும் சொந்த முயற்சியில தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரா விளையாடணும்... பாண்டியா அறிவுரை

கேன்பெரா : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் சொந்த முயற்சியில் விளையாட வேண்டும் என்று ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அறிவுறுத்தியுள்ளார்.

நேற்றைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 92 ரன்களை குவித்து ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுககப்பட்டார் ஹர்திக் பாண்டியா.

மேலும் இந்த ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் சேர்த்து இதுவரை 210 ரன்களையும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் பாண்டியா.

3வது போட்டியில் இந்தியா வெற்றி

3வது போட்டியில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் 2க்கு ஒன்று என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வெற்றி கொண்டுள்ளது. ஆயினும் நேற்றைய 3வது போட்டியில் இந்திய அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தேல்வியடைந்துள்ளது.

92 ரன்களை குவித்த பாண்டியா

92 ரன்களை குவித்த பாண்டியா

இந்த 3வது போட்டியில் 92 ரன்களை குவித்து ஆட்ட நாயகனாக தேர்வாகியுள்ளார் இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. 3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் 210 ரன்களையும் ஒரு முக்கிய விக்கெட்டையும் அவர் வீழ்த்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அவர் பந்துவீச்சை மேற்கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாண்டியா அறிவுறுத்தல்

பாண்டியா அறிவுறுத்தல்

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் சொந்த முயற்சியில் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கடுமையான பயிற்சிகளின்மூலம் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டிற்காக விளையாடுவது மகிழ்ச்சி

நாட்டிற்காக விளையாடுவது மகிழ்ச்சி

மேலும் நடராஜன் மற்றும் மற்ற பௌலர்கள் குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்ததாக டி20 போட்டிகளை ஆட தயாராக உள்ளதாகவும் நாட்டிற்காக விளையாடுவதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்ததற்காக தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டார்.

Story first published: Thursday, December 3, 2020, 13:44 [IST]
Other articles published on Dec 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+