இவர் செஞ்சது சாதாரண காரியம் இல்லை.. பெயின் கில்லர்.. 21 ஓவர்கள்.. மிரள வைத்த நியூசி. வீரர்!
வெல்லிங்க்டன் : நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் நெய்ல் வேக்னர் உடைந்த கால் விரல்களுடன் டெஸ்ட் போட்டியில் மூன்று நாட்கள் பங்கேற்று, பந்து வீசி இருக்கிறார்.
கடும் வலியையும் பொருட்படுத்தாமல் அவர் மருத்துவ உதவியுடன் போட்டியில் பங்கேற்று இருக்கிறார்.
அவரது பந்துவீச்சால் டிரா ஆக இருந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

காயம்
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆடியது. இந்தப் போட்டியில் இரண்டாம் நாள் பேட்டிங் செய்த போது பந்து அவரது கால் விரல்களை பலமாக தாக்கியது. அதில் இரண்டு விரல்கள் மோசமாக பாதிக்கப்பட்டது.

அதிக வலி
அவருக்கு அதிக வலி இருந்தது. எனினும், அவர் பெயின் கில்லர் மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொண்டு அடுத்த மூன்று நாட்கள் போட்டியில் பங்கேற்றார். கால் விரல்கள் உடைந்த நிலையில் அவர் 21 ஓவர்கள் வீசினார் என்பது தான் இதில் உச்சகட்டம்.

டிரா ஆகும்?
மேலும், கடைசி நாளில் பாகிஸ்தான் வீரர்கள் பாவாத் ஆலம் மற்றும் பாஹீன் அஷ்ரப் போட்டியை டிரா செய்யும் நோக்கில் ஆடி வந்தனர். எப்பயும் போட்டி டிரா ஆகும் என பலரும் எண்ணிய போது அவர்களின் விக்கெட்களை வீழ்த்தினார் வாக்னர்.

நியூசிலாந்து வெற்றி
அதன் மூலம் பாகிஸ்தான் அணியின் பின்வரிசை வீரர்கள் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அவர்களின் விக்கெட்களை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி. வலியுடன் ஆடி தன் அணியை வெற்றி பெற வைத்த வாக்னர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சை துவங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications