For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நோபாளம் கிரிக்கெட் கேப்டனுக்கு பிடிவாரண்ட்.. ரசிகர்கள் அதிர்ச்சி

காத்மண்டு : நேபாளம் கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்திப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி அளித்துள்ள பாலியல் பலாத்காரம் புகாரில் அவருக்கு காத்மாண்டு நீதிமன்றம் பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது.
நேபாளம் அணிக்காக 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சந்திப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

Recommended Video

IND vs AFG Virat Kohli-ன் அசுரத்தனமான ஆட்டம்! அபார சதம் *Cricket

தற்போது ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்திப் விளையாடி வருகிறார்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

இந்த நிலையில் தான் சந்திப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் நண்பர் ஒருவர் மூலம் சந்திப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும், இதனை எடுத்து ஆகஸ்ட் 21ஆம் தேதி காத்மாண்டு ஹோட்டல் ஒன்றில் தம்மை சந்திப் ரூமுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

பிடிவாரண்ட்

பிடிவாரண்ட்

இதனையடுத்து சந்திப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது அந்தப் பெண்ணிற்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்று மருத்துவச் செக்கப்ளும் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சந்திப்க்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

ஆனால் சந்திப் தற்போது நேபாளில் இல்லை. அவர் கடந்த 22ஆம் தேதி நேபாளத்தை விட்டு புறப்பட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். வளர்ந்து வரும் கிரிக்கெட் நாடான நேபால் தற்போது டி20 போட்டிகளில் ஒரு அளவு முன்னேறி வருகிறது நேபால் அணியின் கேப்டன் சந்திப்பு நல்ல திறமையான சுழற் பந்துவீச்சாளர் என்ற பெயரை பெற்றவர்.

விரைவில் கைது

விரைவில் கைது

கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் நிலையில் தற்போது பாலியல் பலாத்காரம் புகாரில் சிக்கி இருப்பது ஒட்டுமொட்ட ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து நேபால் கிரிக்கெட் வாரியம் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.சந்திப் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று நாடு திரும்பப்படும் போது கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Thursday, September 8, 2022, 19:28 [IST]
Other articles published on Sep 8, 2022
English summary
Nepal cricket captain Sandeep Lamichhane accused in minor rape case17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நோபாளம் கிரிக்கெட் கேப்டனுக்கு பிடிவாரண்ட்.. ரசிகர்கள் அதிர்ச்சி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+