For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்லின் ஒரே நேபாள வீரரை தேடும் இண்டர்போல்.. சரணடைவதாக முகநூலில் சந்தீப் அறிவிப்பு.. என்ன நடந்தது?

காத்மண்டு : நேபாளம் கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லாமிச்சானே, 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சந்திப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

23 வயதான சந்தீப் லாமிச்சானே, கிரிக்கெட்டில் பெரிய உயரத்தை தொட்டு, நேபாளத்துக்கு பெருமை சேர்த்து தருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது இண்டர்போல், அவரை தேடும் அளவுக்கு குற்றவாளியாக மாறிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறிது.

அதற்கு காரணம் 17 வயது சிறுமி அளித்துள்ள பாலியல் பலாத்காரம் புகார் தான்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

கடந்த மாதம் செப்டம்பர் 6ஆம் தேதி சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் நண்பர் ஒருவர் மூலம் சந்திப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும், இதனை எடுத்து ஆகஸ்ட் 21ஆம் தேதி காத்மாண்டு ஹோட்டல் ஒன்றில் தம்மை சந்திப் ரூமுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

பிடிவாரண்ட்

பிடிவாரண்ட்

இதனையடுத்து சந்தீப் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட சோதனையில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு உறுதியானது. இதனை அடுத்து சந்திப்க்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் சந்தீப் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி நேபாளத்தை விட்டு புறப்பட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றார். நேபாளம் திரும்பினால் தாம் கைது செய்யப்படும் என்பதை அறிந்த சந்தீப், வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இந்த வழக்கு நேபாளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் அழுத்தங்களும் ஏற்பட்டது.

இண்டர்போல்

இண்டர்போல்

இதனையடுத்து நேபாள கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து அவரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதனையடுத்து சந்தீப்பை கைது செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இண்டர்போலுக்கு நேபாள நாட்டு காவல்துறை கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து கடந்த வாரம் சந்தீப்பை தேடப்படும் குற்றவாளி என இண்டர்போல் அறிவித்தது.

சரணடைய போகிறேன்

சரணடைய போகிறேன்

இந்த நிலையில், சந்தீர் லாம்சானே முகநுலில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் வரும் 6ஆம் தேதி நேபாளத்துக்கு திரும்பி போலீசாரிடம் சரணடைய உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் பொய்யானது என்றும், நீதி மேல் நம்பிக்கை உள்ளது. நான் வழக்கில் குற்றமற்றவன் என நிரூபிபேன் என்று சந்தீப் லாமிச்சானே குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Saturday, October 1, 2022, 23:19 [IST]
Other articles published on Oct 1, 2022
English summary
Nepal cricket captain Sandeep Lamichhane announced he will surrender to police ஐபிஎல்லின் ஒரே நேபாள வீரரை தேடும் இண்டர்போல்.. சரணடைவதாக முகநூலில் சந்தீப் அறிவிப்பு.. என்ன நடந்தது?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+