Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

13 பந்தில் 6 விக்கெட்.. 6 டக் அவுட்.. டி20யில் வரலாற்று சாதனை.. தெறிக்கவிட்ட அஞ்சலி சந்த்!

Recommended Video

Anjali Chand vs maladives: Breaks worls record with 6 wickets for 0 runs

பொக்காரா : நேபாளம் - மாலத்தீவு மகளிர் அணிகள் இடையே ஆன டி20 போட்டியில் நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 6 விக்கெட் வீழ்த்தினார்.

இது உலக அளவில் ஆடவர் மற்றும் மகளிர் டி20 வரலாற்றில் புதிய பந்துவீச்சு சாதனை ஆகும்.

கடந்த மாதம் தீபக் சாஹர் வங்கதேச அணிக்கு எதிராக செய்த பந்துவீச்சு சாதனையை முறியடித்துள்ளார் அஞ்சலி.

நேபாளம் - மாலத்தீவு போட்டி

நேபாளம் - மாலத்தீவு போட்டி

நேபாளம் - மாலத்தீவு இடையே நடந்த மகளிர் டி20 போட்டியில் அனுபவம் அற்ற, பலவீனமான மாலத்தீவு அணியின் விக்கெட்களை அள்ளினார் நேபாள அணியின் பந்துவீச்சாளர் அஞ்சலி சந்த்.

13 பந்தில் ஆறு விக்கெட்

13 பந்தில் ஆறு விக்கெட்

இந்தப் போட்டியில் மாலத்தீவு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் வீராங்கனைகள் பேட்டிங் செய்ய திணறினர். அஞ்சலி சந்த் வெறும் 13 பந்துகள் மட்டுமே வீசி அதில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.

ஆறு டக் அவுட்

ஆறு டக் அவுட்

ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காத அஞ்சலியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஆறு பேருமே டக் அவுட் ஆனார்கள். அதில் மூன்று பேர் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி, கோல்டன் டக் அவுட்டை பதிவு செய்தனர்.

ஹாட்ரிக் சாதனை

ஹாட்ரிக் சாதனை

இந்த ஆறு விக்கெட்டில் கடைசி மூன்று விக்கெட்கள் ஹாட்ரிக் விக்கெட்களாக வீழ்த்தி இருந்தார் அஞ்சலி சந்த். ஒரு ரன் கூட கொடுக்காமல் ஆறு விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் அஞ்சலி சந்த் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

தீபக் சாஹர் சாதனை

தீபக் சாஹர் சாதனை

கடந்த மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தியது சர்வதேச டி20 போட்டிகளில் மிகச் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார் அஞ்சலி.

மலேசிய வீராங்கனை சாதனை

மலேசிய வீராங்கனை சாதனை

மேலும், மகளிர் கிரிக்கெட்டில் மலேசிய வீராங்கனை மாஸ் எலிசா, சீன மகளிர் அணிக்கு எதிராக 2019 ஜனவரி மாதம் 3 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அந்த சாதனையையும் உடைத்து ரன்னே கொடுக்காமல் 6 விக்கெட்கள் எடுத்துள்ளார் அஞ்சலி.

பரிதாப மாலத்தீவு

பரிதாப மாலத்தீவு

மாலத்தீவு அணியின் நிலை தான் இதில் பரிதாபமாக இருந்தது. அந்த அணியில் இரண்டு வீராங்கனைகள் மட்டுமே ரன் எடுத்தனர். மீதமிருந்த 9 பேரும் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

அதிகபட்ச ரன்

அதிகபட்ச ரன்

துவக்க வீராங்கனை ஹம்சா 9 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன் ஆகும். அடுத்து ஹப்ஸா 4 ரன்கள் எடுத்தார். 12 பந்துகளை சந்தித்து, நேபாள அணியில் அதிக பந்துகளை சந்தித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் ஐமா ஐசாத். ஆனால் அவர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

மாலத்தீவு அணியின் 6 விக்கெட்களை அஞ்சலி சந்த் எடுத்த நிலையில், கருணா பந்தாரி 2 விக்கெட்கள் வீழ்த்தினார். மீதமுள்ள 2 விக்கெட்கள் ரன் அவுட்டில் வீழ்ந்தது. 10.1 ஓவரில் மாலத்தீவு அணி 16 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஒரே ஓவரில் சேஸிங்

ஒரே ஓவரில் சேஸிங்

அடுத்து ஆடிய நேபாள அணி ஐந்தே பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது. 4 எக்ஸ்ட்ரா ரன்கள் போக, மீதமிருந்த ரன்களை அடித்தார் ஸ்ரேஸ்தா. அவர் 3 ஃபோர் அடித்தார். 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நேபாள அணி.

Story first published: Monday, December 2, 2019, 19:11 [IST]
Other articles published on Dec 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+