Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சின்ன கல்லு, பெருத்த லாபம்.. கடைசி நிமிடம் வரை திரில்.. யுஏஇ அணியை வீழ்த்தியது நெதர்லாந்து

ஜீலாங் : டி20 உலககோப்பை தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் யுஏஇ அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வீழத்தியது.

 Netherland beat uae by 3 wickets and registered first win in 2 world cups

டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சிராக் சூரி, 20 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார்.

மற்றொரு தொடக்க வீரரான முகமது வசீம் 47 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து களமிறங்கிய கஷிஃப் 15 ரன்களும், அரவிந்த் 18 ரன்களும் எடுத்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் 111 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியில் விக்ரமஜித் 10 ரன்களும், மேக்ஸ் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நடுவரிசை வீரர்களான பெஸ் டி லீட் 14 ரன்கள், ஆக்கர்மேன் 17 ரன்கள் மட்டுமே சேர்க்க, அந்த அணியின் அதிரடி வீரர் குப்பர் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அனுபவ வீரர் வெண்டர் மெர்வ் டக் அவுட்டாக, வெற்றிக்கு தேவைப்பட்ட ரன்களும், எஞ்சிய பந்துகளும் சரி சமமாக ஆன நிலையில், கடைசி ஒரு பந்து எஞ்சிய நிலையில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 புள்ளிகள் பெற்று நெதர்லாந்து அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த டி20 உலககோப்பையில் ஒரு போட்டியை கூட பதிவு செய்யாத நெதர்லாந்து, இம்முறை முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Story first published: Sunday, October 16, 2022, 21:09 [IST]
Other articles published on Oct 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+