Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்பவும் முதலில் இருந்தா..?? கொரோனாவால் சர்வதேச கிரிக்கெட் தொடர் ரத்து..!!

தென்னாப்பிரிக்காவில் தற்போது B.1.1529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் உருமாறியுள்ளது.

இது டெல்டா வைரஸை விட வேகமாக பரவ கூடியது, மேலும் ஆபத்தானது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து உலக சுகாதார மையமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதனால் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

விமான போக்குவரத்து

விமான போக்குவரத்து

தென்னாப்பிரிக்காவில் உருவாகியுள்ள புதிய வைரஸ் காரணமாக பிரிட்டன், ஜெர்மனி,இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே நாடகளுக்கு விமான போக்குவரத்தை தடை செய்துள்ளது.

தொடர் ரத்து

தொடர் ரத்து

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து அணி ஒருநாள் போட்டியில் விளையாடியது. இந்த நிலையில் புதிய வைரஸ் அச்சுறுத்தலால் தொடரை ஒத்திவைக்க இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் முடிவு எடுத்துள்ளது.

விளக்கம்

விளக்கம்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம், புதிய வைரஸ்காரணமாக விமானப் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இதனால் தாங்கள் ஊர் திரும்ப முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். மற்றபடி, பயோ பபுளிலும், பாதுகாப்பிலம் எவ்வித குறையும் இல்லை. இது முழுக்க முழுக்க விமான போக்குவரத்தை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்பட்டுள்ளது

 இந்தியா தொடர்

இந்தியா தொடர்

நெதர்லாந்து தொடர் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா தொடர் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இல்லையேனில் கடும் பயோ பபுள் விதிகளை பின்பற்றி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படலாம் என்ற கூறப்படுகிறது.ஏற்கனவே இந்தியா ஏ அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், அவர்களுடைய பாதுகாப்பு குறித்தும் தற்போது கவலை எழுந்துள்ளது.

Story first published: Saturday, November 27, 2021, 21:21 [IST]
Other articles published on Nov 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+