Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லி திரும்ப டீமுக்கு வந்துடுங்க.. பயமா இருக்குது.. ரொம்ப பயமா இருக்குது.. நெட்டிசன்ஸ் கதறல்

தர்மசாலா: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமாக ஆடியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 112 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை வீரர்களின் அதிரடியால் 20.4 ஓவரில் இந்தியாவின் 113 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்தது.

இந்த நிலையில் கோஹ்லி இல்லாத காரணத்தால் தான் இந்திய அணி மோசமாக ஆடி இருக்கிறது, எனவே கோஹ்லி மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சிலர் கோஹ்லி திருமணத்தை நிறுத்திவிட்டு மீண்டும் அணியில் இணைய வேண்டும் என்றும் காமெடியாக கோரிக்கை வைத்துள்ளனர்.

நீங்க வேணும்

கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் கோஹ்லி அனுஷ்கா காதலை வைத்து இவர் இப்படி எழுதியுள்ளார். அதில் ''கோஹ்லியிடம், அனுஷ்கா 'நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது' என்று கூறுகிறார். உடனே இந்திய அணியும், கோஹ்லியிடம் 'நீங்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியாது''' என்று கூறுவது போல காமெடியாக எழுதியுள்ளார்.

கோபத்துல பண்ணிட்டாங்க

இந்திய அணி இலங்கை தொடரில் இருப்பதால் இந்திய வீரர்கள் யாரும் கோஹ்லியின் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை. இதையடுத்து ''கோஹ்லியின் திருமணத்திற்கு யாரும் அழைக்கப்படாத கோபத்திலேயே வீரர்கள் இப்படி செய்துவிட்டார்கள்'' என்று இவர் காமெடியாக குறிப்பிட்டுள்ளார்.

உடனே வாங்க கோஹ்லி

இந்த நிலையில் கோஹ்லியிடம் இந்திய அணியின் கோச் வித்தியாசமான ஒரு கோரிக்கை வைப்பது போல இதில் இவர் காமெடியாக எழுதியுள்ளார். அதில் ''கோஹ்லியை மீண்டும் அழைத்துவிட்டார்கள். உடனடியாக இந்திய அணியின் உடை மாற்றும் அறைக்கு கோஹ்லி வருவார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஹனிமூன்

இலங்கை அணியின் சிறப்பான ஆட்டம் குறித்து இவர் இப்படி எழுதியுள்ளார். அதில் ''கோஹ்லிக்கும் அனுஷ்காவுக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க உள்ளது. ஆனால் இலங்கை அணி இப்போதே இந்தியாவில் ஹனிமூன் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, December 11, 2017, 10:23 [IST]
Other articles published on Dec 11, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+