
கபில் அறிவிப்பு
அவர்களில் சிம்மன்ஸ், போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து எஞ்சிய 5 பேரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை பயிற்சியாளர் தேர்வுக் குழு தலைவர் கபில் தேவ் அறிவித்தார்.

தேர்வுக்குழு விளக்கம்
மீண்டும் ரவி சாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டதாக அவர் கூறினார். சாஸ்திரி, மைக் ஹெசன், டாம் மூடி ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் என்ன செய்ய போகிறேன் என்று தொகுத்து அளித்த விதத்திலும், கம்யூனிகேஷன் திறனிலும் சாஸ்திரி சிறந்து விளங்கியதால் அவரை தேர்வு செய்ததாக கபில் தேவ் தெரிவித்தார்.

கடும் போட்டி
ரவி சாஸ்திரிக்கு அடுத்தடுத்த இடங்களில் மைக் ஹெசன் மற்றும் டாம் மூடி இருந்துள்ளனர். மைக் ஹெசனும் டாம் மூடியும் சாஸ்திரிக்கு கடுமையாக போட்டியை அளித்திருக்கின்றனர்.

பிசிசிஐ தவறு
ஆகையால், அந்த டாப் 3 பேரின் லிஸ்ட்டை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டது. அதில் மைக் ஹெசனின் பெயரை கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை குழு தவறாக எழுதியிருப்பது தெரிந்தது.

ஹசன் என்பதில் தவறு
அதாவது Mike Hesson தான் அவரது பெயர். ஆனால் அந்த லிஸ்ட்டில் Mike Hassen என எழுதப்பட்டிருந்தது. ஹெசன் என்பதற்கு பதிலாக ஹாசன் என்று தவறாக எழுதியிருந்ததை கண்ட நெட்டிசன்கள், அவ்வளவு தான்... உள்ளே புகுந்து கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.
நெட்டிசன்கள் ஆதங்கம்
கடுமையாக விமர்சனங்களுடன், கபில் தேவ் தலைமையிலான ஆலோசனை குழுவை கழுவி, கழுவி ஊற்றி வருகின்றனர். ஒரு போட்டியாளரின் பெயரை கூட தெளிவாக எழுத்து பிழையில்லாமல் எழுத தெரியவில்லை. எப்படி இவர்கள் தேர்வாளர்களாக மாறினர் என்று கேலி செய்கின்றனர்.
முட்டாள்தனம்
சரியாக பெயரை எழுத தெரியவில்லை... ஆக ரவி சாஸ்திரி ஒருவர் தான் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. எல்லாரையும் முட்டாளாக்கும் வகையில் தவறான முடிவை கபில்தேவ் மற்றும் குழுவினர் எடுத்துள்ளனர் என்று தெரிவித்திருக்கின்றனர்.
கூகுள் பார்த்திருக்கலாம்
ரிஷப் கச்சுரா என்பவர் பெயரை எழுதும் முன்பாக, கூகுள் பண்ணி பார்த்திருக்கலாம். கரெக்டான ஸ்பெல்லிங் கிடைத்திருக்கும். செக் செய்து இருக்கலாம் என்று ஆதங்கப் படுகிறார். எலக்ஷனா, செலஷனா என்றும் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











