சட்டையை மாற்றினாலும் பட்டையை கிளப்புவோம்.. புனே வெற்றிக்காக டோணியை புகழும் அசத்தல் மீம்ஸ்கள்
சென்னை: ஐபிஎல் போட்டிகளில் ஆட சென்னை சூப்பர் கிங்சுக்கு 2 வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புனே ஜெயின்ட்ஸ் அணிக்கு டோணி தலைமையேற்றுள்ளார்.
சென்னைக்காக ஏற்கனவே விளையாடிய அஸ்வின், டுப்ளசி போன்றோரும், புனே அணியில் இடம் பிடித்துள்ளனர். சென்னை அணி தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவந்த ஒரு அணி. எதிரணியினர் எப்போதுமே கிலியோடுதான் சென்னை அணியை சந்திப்பார்கள்.
இந்நிலையில், புனே நேற்றைய முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பையை அதன் சொந்த மண்ணிலேயே 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்று அசத்தியது.
டோணி தலைமையில் புனே அணியும் சிறப்பாக செயல்படுவதால் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். டோணியை, பாட்ஷா ரேஞ்சில் வைத்து மீம் உருவாக்கி புகழ்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அப்படிப்பட்ட சில மீம்களை பாருங்கள்.
பாட்ஷா.. பாட்ஷா..
பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாப்பாத்திரம் தனது பழைய 'டான்' வாழ்க்கையை பற்றி, கல்லூரி முதல்வரிடம் எடுத்துரைக்கும். அப்போது மும்பை நிகழ்வுகள் மங்கலாக பின்னணியில் காண்பிக்கப்படும். டோணியும் அப்படித்தான், சென்னையில் டான் போல செயல்பட்டவர் என்பதை புனே வெற்றி நிரூபித்துள்ளது.
ஆதிக்கம் தொடரும்
இதுவும் பாட்ஷா பட காட்சிதான். வில்லன் ரகுவரன் கதாப்பாத்திரம், ரஜினியின் எழுச்சியை கண்கூடாக பார்க்கும் தருணத்தை டோணி அணியின் வெற்றிக்கு ஒப்பிட்டுள்ளனர் நெட்டிசன்கள். எப்போதும் போல எதிரணிகளுக்கு கிலிதானாம்.
சிவாஜியும் நான்தான், எம்.ஜி.ஆரும் நான்தான்
ரஜினிகாந்த் நடித்த சிவாஜி திரைப்படத்தில், சிவாஜி கதாப்பாத்திரம் இறந்துவிடுவதை போல காண்பித்துவிட்டு, புதிதாக எம்.ஜி.ஆர் என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினி வருவார். சிஎஸ்கே முடிந்துவிட்டது என்று நினைத்த எதிரணியினருக்கு இப்போது புனேயை பார்த்து கலக்கம் வந்துவிட்டதை இந்த மீம் கூறுகிறது.
பழிக்கு பழி
கமல் ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் தந்தை கமல் கதாப்பாத்திரத்தை கொன்ற வில்லன்களை, மகன் கமல் கதாப்பாத்திரங்கள் பழிவாங்கும். அதேபோல, சிஎஸ்கே வெளியேற்றப்பட்டதற்கு, புனேவும், குஜராத் அணியும் இணைந்து அதிரடியால் பழிவாங்கும் என்கிறது இந்த மீம்.


Click it and Unblock the Notifications