இந்தியா தோல்விக்கு டோணியா காரணம்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

Posted By:

ராஜ்கோட்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டோணியின் ஆரம்ப கட்ட மந்தமான ஆட்டம்தான் இந்திய தோல்விக்கு காரணம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

டோணி சிங்கிள்கள் தட்டி மறுமுனையில் நல்ல ஃபார்மில் இருந்த கோஹ்லிக்கு அடிக்க வாய்ப்பை வழங்காமல் அதிக பந்துகளை அவரே எடுத்துக்கொண்டார் என்பது டோணி மீதான குற்றச்சாட்டுக்கு முக்கிய காரணம்.

கடைசி நேரத்தில் அவர் அதிரடி காட்டினாலும், அதற்குள் நியூசிலாந்து அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்திவிட்டது. இருப்பினும் டோணியை அவரது ரசிகர்கள் விட்டுக்கொடுக்கவில்லை. இதோ சில டிவிட்டுகள்.

6 பவுலர்களாம் 200 ரன்னாம்

டோணி இந்த தோல்விக்கு காரணம் இல்லை. 6 பவுலர்களுடன் விளையாடும் முடிவை எடுத்தபோதும், சுமார் 200 ரன்களை அள்ளிக்கொடுத்துள்ளீர்கள். அப்போதே நீங்கள் பின்னடைவை சந்தித்துவிட்டீர்கள். பிளாட்பார்ம் சரியாக இருந்தால்தானே அடித்து ஆட முடியும்.

இப்படியா லாஜிக்?

ரோகித் ஷர்மா 5(6) ஹர்திக் பாண்ட்யா 1(2). ஆனால், டோணிக்கு எதிரானவர்கள் டோணி 49(37) ரன்கள் எடுத்தபோதிலும் தோல்விக்கு அவரை பொறுப்பாக்குகிறார்கள். லாஜிக் இல்லை.

எல்லோரும் சேர்ந்தே அவ்வளவு அடிக்கவில்லை

ரோகித் + தவான் + ஸ்ரேயாஷ் ஐயர் + ஹர்திக் பாண்ட்யா + அக்சர் பட்டேல் = 35(36) டோணி = 49(37). இப்படி ஒரு புள்ளி விவரத்தை போட்டு டோணி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் இவர்.

சுயநலம் இல்லை

டோணி மட்டும் சுயநலவாதி என்றால் அவர் அரை சதம் கடந்திருப்பார். ஆனால் அடித்தாட நினைத்து அவுட் ஆகியிருக்க மாட்டார். இவ்வாறு சொல்கிறது இந்த டிவிட். 49 ரன்களில் சிங்கிள் ஓட வாய்ப்பு கிடைத்தும், டோணி ஓடாமல் அடித்து ஆடுவதற்காக புவனேஸ்வர்குமாரை திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால் அடுத்த பந்தில் டோணி அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, November 5, 2017, 14:03 [IST]
Other articles published on Nov 5, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற