Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருமுறையா, இருமுறையா, நாலாவது முறையும் சஹல் பந்தில் அவுட்டான மேக்ஸ்வெல்.. வறுக்கும் நெட்டிசன்ஸ்

ராஞ்சி: ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் இன்றைய டி20 போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் சஹல் பந்து வீச்சில் அவுட்டானார். இது நெட்டிசன்களை கேலி செய்ய தூண்டிவிட்டுள்ளது.

முதல் 3 ஒருநாள் போட்டிகளிலும் சஹல் பந்துவீச்சில்தான் ஆஸி. அதிரடி வீரர் மேக்ஸ்வெல் அவுட்டானார். அதிலல் 2 முறை டோணி ஸ்டெம்பிங் செய்தார். 4 மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளில் மேக்ஸ்வெல்லுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

இப்போது முதலாவது டி20 போட்டியில் களமிறங்கி, சஹலிடமே மீண்டும் அவுட்டாகியுள்ளார், மேக்ஸ்வெல். அதுவும் ஒரு ஷாட் பிட்ச் பந்தில் அவுட்டாகி நடையை கட்டினார். இதனால் ஆஸி. அணி சரிவை நோக்கி வாய்ந்தது. இது இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது.

மேக்ஸ்வெல்லுக்கு இதே வேலை

தினமும் எழுவது, சாப்பிடுவது, மிடில் ஆர்டரில் களமிறங்குவது, சஹலிடம் அவுட்டாவது, தோற்பது.. இதுதான் மேக்ஸ்வெல் வாடிக்கை என்று கேலி செய்கிறது இந்த மீம்.

சின்ன பகவதி

அடிப்பது போல ஆரம்பித்துவிட்டு, பொசுக்கென விழுந்துவிடுவதில் பாகிஸ்தானின் அப்ரிடி புகழ் பெற்றவர். மேக்வெல் ஆஸ்திரேலியாவின், அப்ரிடி என்று கேலி செய்கிறது இந்த டிவிட்.

அதே சிரிப்பு

ஒவ்வொரு போட்டியிலும் இப்படித்தான் மேக்ஸ்வெல்லை அவுட் செய்துவிட்டு, சஹல் வெகுளியாக சிரிப்பார். அதை திரைப்பட காட்சியை எடுத்துப்போட்டு கேலி செய்கிறது இந்த டிவிட்.

என்ன ஒரு நம்பிக்கை

மேக்ஸ்வெல்லும், ஹென்ரிகுயிசும் விக்கெட்டை விட்டெறிவது என்பது சஹல் மற்றும் குல்தீப் ஆகியோரிடம் அவர்கள் வைத்துள்ள பதற்றத்தையும், நம்பிக்கையையும்தான் காட்டுகிறது என்கிறது இந்த டிவிட்.

நல்லா இல்லைங்க

சஹல்: எப்படி ஃபீல் பண்றீங்க மேக்ஸ்வெல்?

மேக்ஸ்வெல்: மேக்ஸ்'நாட்வெல்'.

Story first published: Saturday, October 7, 2017, 23:07 [IST]
Other articles published on Oct 7, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+