Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பட்லரே தோனி ரசிகர்தான்.. ஆஸி. கேப்டனை லெஃப்ட், ரைட் வாங்கும் ரசிகர்கள்.. வாகன் முகத்திலும் கரி

Recommended Video

எப்பவும் தோனிதான் சிறந்த வீரர்.... கொண்டாடும் ரசிகர்கள்

லண்டன்: ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் 'தல' தோனியைவிட, இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர்தான் தற்போதைய நிலையில் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலிய அணி தலைவர் டிம் பெயின் கூறிய கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ரத்தங்களை சூடாக்கிவிட்டது.

மலைக்கும், மடுவுக்கும் நடுவே ஒப்பீடு செய்வதா என கொந்தளிக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இந்த விஷயத்தில், தோனிக்கு இங்கிலாந்தை தவிர பெரும்பாலான கிரிக்கெட் தேசங்களின் பெருவாரியான ரசிகர்கள் ஆதரவு உள்ளது.

இங்கிலாந்து மாஜி வீரர் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் கணக்கில் வைத்த கருத்துக் கணிப்பில் கூட பட்லர் முகத்தில் கரி பூசி தோனி வெற்றிவாகை சூடியுள்ளார். நெட்டிசன்களின் கருத்துக்களை இங்கே பாருங்கள்.

தோனி ரசிகர் பட்லர்

எப்போதுமே தல தோனிதான். பட்லரே கூட நான் தோனி ரசிகர் என கூறியுள்ளார் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

தோனி பட்லர் ஒப்பீடு

தோனி மற்றும் பட்லர் நடுவேயான ரன் ஒப்பீடை வழங்கியுள்ள இந்த நெட்டிசன், தோனி, டி20 காலத்திற்கு முன்பே அதிரடியை காட்டத் தொடங்கியவர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி நிச்சயம்

30 வயதுக்கு மேற்பட்ட கிரிக்கெட் வீரர்களில், யோ-யோ எனப்படும் கடினமான உடல் தகுதி தேர்வில் ஒருமுறை கூட ஃபெயில் ஆகாதவர் தோனி மட்டுமே என அவரது ஃபிட்னஸ் லெவலை புகழ்கிறார் இந்த நெட்டிசன்.

பட்லருக்கு தோனி இன்ஸ்பிரேஷன்

பட்லருக்கே தோனிதான் இன்ஸ்பிரேஷன் என கூறுகிறார் இந்த நெட்டிசன். பட்லர் தனது வாயாலேயே இதை கூறியுள்ளதை இவர் சுட்டிக் காட்டி ட்வீட் செய்துள்ளார்.

அசிங்கப்பட்ட வாகன்

இங்கிலாந்து மாஜி வீரர் மைக்கேல் வாகன், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன், பட்லரா, தோனியா, தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டிகாக்கா என டிவிட்டரில் போல் வைத்தார். பட்லர் வெற்றி பெறுவார் என நினைத்தா வாகனுக்கு ஏமாற்றம். தோனிக்கு 66 சதவீத ரசிகர்கள் ஆதரவு அளிக்க, பட்லருக்கு கிடைத்ததோ 30 சதவீத வாக்குகள்தான். பல நாட்டு ரசிகர்களும் வாக்களித்த போல் இது. டிகாக் 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

Story first published: Wednesday, June 27, 2018, 16:22 [IST]
Other articles published on Jun 27, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+